தாமத வரி தாக்கல் செய்ய கெடு முடிகிறதுதாமத வரி தாக்கல் செய்ய கெடு முடிகிறது ...  புதிய பங்கு வெளியீடு ‘ஈஸ்மை டிரிப்’ முயற்சி புதிய பங்கு வெளியீடு ‘ஈஸ்மை டிரிப்’ முயற்சி ...
மொத்த விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2019
06:29

புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில், 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நவம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த அக்டோபர் மாதத்தில், 0.16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 4.47 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்களின் விலை, 11 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய மாதத்தில், 9.80 சதவீதமாக இருந்தது.

அதேசமயம், உணவு அல்லாத பொருட்களின் விலை, அக்டோபர் மாதத்தில், 2.35 சதவீதமாக இருந்தது, நவம்பரில், 1.93 சதவீதமாக குறைந்துள்ளது. நவம்பரில், தயாரிப்பு பொருட்களின் மொத்த விலை பணவீக்கத்தில் எந்த பெரிய மாற்றமும் இன்றி, மைனஸ், 0.84 சதவீதமாக உள்ளது.கடந்த வாரம் வெளியான, சில்லரை விலை பணவீக்கம் குறித்த அறிவிப்பில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் நவம்பர் மாதத்தில், 5.54 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வுக்கு, காய்கறிகள், பருப்பு மற்றும் புரதம் மிகுந்த பொருட்களின் விலை அதிகரித்தது காரணமாக அமைந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)