பதிவு செய்த நாள்
17 டிச2019
06:32

புதுடில்லி : ‘ஆன்லைன்’ சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான, ‘ஈஸ்மை டிரிப்’ பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம், 510 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், நிறுவனர்களான நிஷாந்த் பிட்டி, நிகாந்த் பிட்டி ஆகிய இருவருடைய, 225 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், மீதித் தொகைக்கு புதிய பங்குகளையும் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஈஸ்மை டிரிப் டாட் காம் நிறுவனம், ‘ஈஸி டிரிப் பிளானர்ஸ்’ எனும் தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும். இந்நிறுவனம், 2008ம் ஆண்டில் துவங்கப்பட்டதாகும்.
ஈஸ்மை டிரிப் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஆக்ஸிஸ் கேப்பிட்டல் மற்றும் ஜே.எம்., பைனான்ஷியல்’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.டில்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும், சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வெளிநாடுகளிலும் இந்நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|