பதிவு செய்த நாள்
17 டிச2019
06:38

புதுடில்லி : ‘பார்ச்சூன் இந்தியா 500’ பட்டியலில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை பின்னுக்குத் தள்ளி, முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது, முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!’இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களை பட்டியலிட்டு வெளியாகும், பார்ச்சூன் இந்தியா 500 பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த, 10 ஆண்டுகளாக இந்த இடத்தை வைத்திருந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடித்துள்ளது ரிலையன்ஸ். கடந்த, 2018- – 19ம் நிதியாண்டில், 5.81 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது, ரிலையன்ஸ். கடந்த, 10 ஆண்டுகளில், பார்ச்சூன் இந்தியா 500 பட்டியலில், முதலிடத்தை பெற்ற முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையையும் ரிலையன்ஸ் பெற்றுள்ளது.
அரசுக்கு சொந்தமான, ஓ.என்.ஜி.சி., மூன்றாவது இடத்தையும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.கடந்த, 2018 – -19ம் ஆண்டில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை விட, இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|