பதிவு செய்த நாள்
17 டிச2019
06:44

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக, ‘வேதாந்தா’ குழுமத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
‘மாருதி சுசூகி’ நிறுவனம் இதுவரை, ஆறு லட்சம், ‘ஆட்டோமேட்டிக்’ கார்களை விற்பனை செய்துள்ளது.என்.இ.எப்.டி., எனும், தேசிய மின்னணு பணப் பரிமாற்ற சேவை, நேற்று முதல் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் வழங்குவது அமலுக்கு வந்தது. ஜனவரி முதல், இப்பரிமாற்றத்துக்கான கட்டணமும் ரத்து ஆகிறது.கனடாவைச் சேர்ந்த, ‘புரூக்பீல்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் பார்ட்னர்ஸ்’ நிறுவனம், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தொலை தொடர்பு கோபுரங்கள் வணிகத்தில், 25 ஆயிரத்து, 215 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
‘ரியல்மி’ நிறுவனம், சந்தைக்கு வந்த முதல் ஆண்டிலேயே, 1.50 கோடி போன்களை விற்பனை செய்துள்ளது.நடப்பு ஆண்டில், முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை, 4 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என, ‘அனராக்’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|