பதிவு செய்த நாள்
21 டிச2019
03:50
மும்பை : கடந்த ஆறு மாதங்களில், பங்குச் சந்தையில், அனில் அம்பானியின் சொத்து மதிப்பு, 73 சதவீதம் அளவுக்கு குறைந்து, 970 கோடி ரூபாயாக ஆகியுள்ளது.
அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ்’ குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 2008ல், 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 2,361 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.அதேபோல், அனில் அம்பானியின் பங்குகளின் மதிப்பும், ஆறே மாதங்களில், 73.43 சதவீதம் அளவுக்கு சரிந்து, 970.10 கோடி ரூபாயாகியுள்ளது.கடந்த ஜூன், 11ம் தேதி, இவற்றின் மதிப்பு, 3,651 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த, 2008ம் ஆண்டு, அனில் அம்பானி உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தார். அந்த சமயத்தில் அவரது சொத்து மதிப்பு, 2.98 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.அனில் அம்பானி குழுமத்தில் தற்போது, திவால் ஆன ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை விடுத்து பார்த்தால், மொத்தம் ஐந்து நிறுவனங்களே சந்தையில் பட்டியலிடப்பட்டவையாக இருக்கின்றன.‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு இருப்பவை.
இவற்றில் எந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமும், 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக இல்லை என்பதும் கவலைஅளிக்கும் செய்தி தான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|