பதிவு செய்த நாள்
24 டிச2019
04:20

புதுடில்லி: ‘மோட்டார் வாகன விபத்துகளில், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும், மூன்றாம் நபர் இழப்பீட்டுத் தொகையை, அதிகபட்சம், 10 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
‘கூடுதல் இழப்பீட்டுத் தொகை, சாலை போக்குவரத்து நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் வழங்கப்பட வேண்டும்’ என, பொதுக் காப்பீடு கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.மோட்டார் வாகனச் சட்டம், 2019படி, மோட்டார் வாகன விபத்துகளில் வழங்கப்படும் மூன்றாம் நபருக்கான இழப்பீடு தொகை மற்றும் அடிப்படை பிரீமியம் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.இதற்காக, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துடன் பேசி முடிவெடுக்க, அந்த சட்டம் வலியுறுத்துகிறது.
தற்போது, வாகன விபத்துகளுக்கான மூன்றாம் நபர் இழப்பீடு தொகைக்கு, உச்ச வரம்பு கிடையாது. தீர்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்கள் நிர்ணயிக்கும் தொகை, மூன்றாம் நபருக்கு இழப்பீடாக வழங்கப்படுகிறது. இது, காப்பீட்டு நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக விளங்குகிறது.இதற்கு பதில், மூன்றாம் நபர் விபத்து காப்பீடு இழப்பீடு தொகையை, 10 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்து, அதை மட்டும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
மீதி தொகையை, சாலை போக்குவரத்து நிதியத்திலிருந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, பொதுக் காப்பீடு கவுன்சிலால் முன்வைக்கப்பட்டுஉள்ளது. பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதித்து, அதன் மூலம், புதிய நிதியம் துவக்கி, மூன்றாம் நபர் இழப்பீடுகளை அதிலிருந்து வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை, மத்திய சாலை போக்குவரத்து துறை ஆராய்ந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|