பதிவு செய்த நாள்
26 டிச2019
03:04

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியை பொறுத்தவரை, தற்போது இருக்கும் பல அடுக்கு வரிகளுக்கு பதில், இரு அடுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், வரியை அடிக்கடி மாற்றக்கூடாது என்றும், நிடி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்துள்ளார்.
அறிமுகம் ஆன நாளிலிருந்து, ஜி.எஸ்.டி., வரி அடுக்குகள் மற்றும் விகிதங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றன.தற்சமயம், 5, 12,18,28 சதவீதம் என நான்கு அடுக்கு வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது.
மேலும், பல்வேறு பொருட்கள், எந்த வரி விதிப்புக்கும் உட்படாததாகவும் உள்ளன.இந்நிலையில், இரண்டு அடுக்கு வரி மட்டுமே போதுமானது என்று, நிடி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆலோசனை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:ஜி.எஸ்.டி., போன்ற மிகப்பெரிய வரி சீர்த்திருத்தங்களை கொண்டு வரும்போது பல்வேறு பிரச்னைகள் வரத் தான் செய்யும். ஆனால், அவை விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். பல நாடுகளில், ஜி.எஸ்.டி.,யை அறிமுகம் செய்த பிறகு நிலைமை சீரடைய நீண்ட காலம் ஆனது.ஜி.எஸ்.டி.,விகிதங்களில் அடிக்கடி மாற்றம் செய்வது பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு துறையும், ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
எனவே, வரி விகிதங்களையோ, அடுக்குகளையோ அடிக்கடி மாற்றுவது சரியாக இருக்காது. இரண்டு அடுக்கு வரி மட்டுமே போதுமானது.வரி விகிதங்களை மாற்றிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வரி வசூலில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வரி விகிதங்களை மாற்றுவது குறித்து ஆலோசிக்கலாம்.ஒவ்வொரு துறையும் வரியை குறைக்க சொல்லி கேட்கின்றன. பிறகு எப்படி அரசால் மேம்பாட்டுக்கான செலவுகளை செய்யமுடியும்? இது சரியான போக்காக இருக்காது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|