நடப்பாண்டில் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்பு நடப்பாண்டில் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்பு ...  பி.எஸ்.என்.எல்., பணிகளுக்கு  இனி ஒப்பந்த நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல்., பணிகளுக்கு இனி ஒப்பந்த நிறுவனங்கள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் வாகன விற்பனை : உள்நாட்டு விற்பனையில் மாற்றத்துக்கான அறிகுறிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2020
00:03

புதுடில்லி:கடந்த ஆண்டில், தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த வாகனத் துறை, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருகிறது. இதன் அறிகுறியில் ஒன்றாக, ‘மாருதி சுசூகி, மகிந்திரா அண்டு மகிந்திரா’ உள்ளிட்ட சில நிறுவனங்களின் உள்நாட்டு விற்பனை, டிசம்பரில் அதிகரித்து உள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மாருதி, மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும், ‘ஹூண்டாய், டொயோட்டா’ நிறுவனங்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

மாருதி சுசூகி

இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, 1.24 லட்சமாக அதிகரித்துள்ளது.இதுவே, அதற்கு முந்தைய ஆண்டில், இதே மாதத்தில், 1.21 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தன. இதையடுத்து, 2.4 சதவீத வளர்ச்சியை, கடந்த டிசம்பரில் எட்டியுள்ளது, மாருதி சுசூகி.இநிறுவனத்தின் காம்பாக்ட் பிரிவில் உள்ள, ‘நியூ வேகன் ஆர், சுவிப்ட், செலிரியோ, இக்னிஷ், பலேனோ, டிசையர்’ ஆகிய கார்களின் விற்பனை, 27.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

டிசம்பரில், காம்பாக்ட் கார்கள் விற்பனை, 65 ஆயிரத்து, 673 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், இதே மாதத்தில், 51 ஆயிரத்து, 346 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தன.பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில் உள்ள, ‘ஜிப்ஸி, எர்ட்டிகா, எக்ஸ்.எல்., 6, எஸ்.கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா’ ஆகியவற்றின் விற்பனை, கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்ததை விட, 17.7 சதவீதம் அதிகரித்துள்ளது.இருப்பினும், சிறிய கார்கள் பிரிவில், ‘ஆல்ட்டோ, எஸ் – பிரெஸ்ஸோ, பழைய வேகன் ஆர்’ ஆகிய கார்கள் விற்பனை, 13.6 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.

மகிந்திரா


மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தைப் பொறுத்தவரை, கடந்த டிசம்பரில், உள்நாட்டில், 37 ஆயிரத்து, 81 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு டிசம்பரில் விற்பனை, 36 ஆயிரத்து, 690 கார்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய்

இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, 2018ம் ஆண்டு டிசம்பரில், 42 ஆயிரத்து, 93 கார்களாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில், 37 ஆயிரத்து, 953 கார்களாக குறைந்து விட்டது. இது, 9.8 சதவீதம் சரிவாகும்.இந்நிறுவனத்தின் மொத்த கார் விற்பனை, 2018 டிசம்பருடன் ஒப்பிடுகையில், கடந்த டிசம்பரில், 9.9 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

டொயோட்டா

டொயோட்டா நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பரில், உள்நாட்டில் மொத்தம், 6,544 கார்களை விற்பனை செய்துள்ளது.இதுவே அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பரில், 11 ஆயிரத்து, 836 கார்களை உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. இதையடுத்து நிறுவனம், 45 சதவீத சரிவை, உள்நாட்டு விற்பனையில் சந்தித்துள்ளது.

டொயோட்டா நிறுவனம், கடந்த ஆண்டில், உள்நாட்டில், 1.26 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது.இதுவே, அதற்கு முந்தைய ஆண்டான, 2018ல், 1.51 லட்சம் கார்களாக இருந்தது. இதையடுத்து, 2019ல் இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, 16.36 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

இன்னும் பல நிறுவனங்களின் விற்பனை விபரங்கள் வர வேண்டியுள்ளது. இதுவரை வந்த விற்பனை நிலவரங்களைப் பார்க்கும்போது, உள்நாட்டு விற்பனை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவது தெளிவாகத் தெரிகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)