பதிவு செய்த நாள்
03 ஜன2020
23:26

புதுடில்லி:ஓட்டல்களில் இருந்து, வீடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவு எடுத்து வரும், ‘ஸ்விக்கி’ நிறுவனம்,ஓட்டல்களிடம் இருந்து பெறும் கமிஷன் தொகையை, அதிகபட்சம், 23 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
வாடிக்கையாளர், ‘ஆர்டர்’செய்யும் உணவு பண்டத்திற்கான விலையில், 12 – 18 சதவீதத்தை, ஓட்டல் நிறுவனங்கள், ஸ்விக்கிக்கு கமிஷனாக, இதுவரை கொடுத்து வந்தன. அந்த தொகை, இப்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்விக்கி நிறுவனம், ஓட்டல்களுடன், 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளும். அந்த ஒப்பந்தத்தை சமீபத்தில் புதுப்பித்த ஓட்டல் நிர்வாகங்களுக்கு, அதிர்ச்சி ஏற்படும் வகையில்,கமிஷன் அளவை, 18 – 23சதவீதமாக ஸ்விக்கி உயர்த்தி இருந்தது.
அதுபோல, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு உணவை கொண்டு வந்து கொடுப்பதற்கான கட்டணத்தையும், சில பகுதிகளில், அந்த நிறுவனம் உயர்த்தி உள்ளது.அதாவது, 98 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அதிகபட்சம், 35 ரூபாய்; 98ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், அதிகபட்சம், 25 ரூபாயை, ‘டெலிவரி’ கட்டணமாக அந்த நிறுவனம் வசூலிக்கிறது என, தகவல்கள் தெரிவிக்கின்றன.ஸ்விக்கியை போலவே, ‘சோமாடோ’வும், கட்டணங்களை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|