பதிவு செய்த நாள்
03 ஜன2020
23:28

புதுடில்லி:இந்த புத்தாண்டு அன்று, வாட்ஸ் ஆப் மொபைல் போன், ‘ஆப்’ மூலம், 10 ஆயிரம் கோடி செய்திகள், தகவல்கள், படங்கள் பகிரப்பட்டுள்ளன. இது, இதுவரை இல்லாத மிகப் பெரிய சாதனை என, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின், ‘பேஸ்புக்’ நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப், 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் இந்த செயலியை, புத்தாண்டு அன்று, உலக மக்கள் பயன்படுத்தி, 10 ஆயிரம் கோடி செய்திகளை பகிர்ந்துள்ளனர். இதில், 2,000 கோடி வாழ்த்து செய்திகள் மற்றும் படங்கள், இந்திய மக்களால் மட்டும் பகிரப்பட்டுள்ளன.
இது, உலக அளவில் பகிரப்பட்ட தகவல்களில், ஐந்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, ஒரே நாளில் பகிரப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தகவல்கள், வாட்ஸ் ஆப் மூலமே பகிரப்பட்டுள்ளது என்பதும் உலக சாதனையாகக் கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|