புதிய ஆண்­டில் புதிய சிக்­கல்! புதிய ஆண்­டில் புதிய சிக்­கல்! ... உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது ...
தலை துாக்­கி­யி­ருக்­கும் அபா­யம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2020
23:47

பங்குச் சந்தை
கச்சா எண்­ணெய் விலை, இந்­திய பொரு­ளா­தா­ரத்­தின் ஸ்தி­ரத்­தன்­மையை நிர்­ண­யிக்க கூடிய இடத்­தில் இருக்­கிறது. கடந்த சில ஆண்டு­க­ளாக, கச்சா எண்­ணெய் விலை கட்­டுக்­கோப்­பிற்­குள்அமைந்­தது, நம் நாட்­டின் நிதி நிலைக்கு பெரி­தும் உத­வி­யது.

உள்­நாட்­டில் எரி­பொருள் விலையை அதி­கம் குறைக்­கா­மல், அதன் மூலம் கிடைக்­கும் வரி உப­ரிப் பணத்தை, முத­லீடு­ க­ளாக அரசு செய்­தது, நம் வளர்ச்­சிக்கு பெரி­தும் உத­வி­யது.தனி­யார் பெரு நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்ய முடி­யாமல் தவிக்­கும் சூழ­லில், அர­சின்
முத­லீ­டு­கள், பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு வழி வகுத்­தன.முந்­தைய ஆட்­சி­யில், பொரு­ளா­தா­ரம் சரி­யா­மல் இருந்­த­தற்கு, அர­சின் முத­லீட்டு திட்­டங்­கள் முக்­கிய கார­ணங்­க­ளாக அமைந்­தன. மறை­மு­க­மாக, கச்சா எண்­ணெய் விலை இதற்கு பெரி­தும் உத­வி­யது.


தொய்வு

ஆனால், 2019ல் புதிய அரசு அமைந்த சில மாதங்­களில், பொரு­ளா­தார வளர்ச்சி சரிய
துவங்­கி­யது. நுகர்வு சார்ந்த தொய்வு இதற்கு முக்­கிய கார­ணம்.இதன் பிர­தி­ப­லிப்­பாக
உற்­பத்­தி­யி­லும், மின் நுகர்­வி­லும், சுரங்க உற்­பத்­தி­யி­லும் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.
கடந்த இரு காலாண்­டு­களில், ஒரு­பு­றம் நுகர்வு குறை­வ­தும், இன்­னொரு புறம் உற்­பத்தி
சரி­வைக் கண்­ட­தும் நமக்கு பெரும் கவ­லை­யைத் தந்­துள்ளன.


இந்த சூழ்­நி­லை­யில் தான், கச்சா எண்­ணெய் விலை உய­ரும் அபா­யம் மீண்­டும் தலை துாக்கி உள்ளது. அமெ­ரிக்கா மற்­றும் ஈரான் நாடு­க­ளுக்கு இடை­யில், போர் வலுக்­கும் அபா­யம்
மீண்­டும் அதி­க­ரிக்க நேர்ந்­தால், அது உலக கச்சா சந்­தை­யில் விலை மீண்­டும் உய­ரச் செய்­யும் என்று, நுகர்வு நாடு­கள் அச்­சப்­ப­டக்­கூ­டும்.இறக்­கு­ம­தியை நம்பி இருக்­கும் நாடு­கள், தங்­கள் நிதி நிலை கெடாது இருக்க, கச்சா எண்­ணெய் விலை, கட்­டுக்­கோப்­பில் இருக்­கவே
விரும்­பு­வார்­கள்.


இனி வரும் வாரங்­கள், உலக கச்சா சந்­தைக்கு கவ­லை­களை கொடுக்­கக்­கூ­டிய கால­கட்­ட­மாக அமை­யும். ஆனா­லும், இன்­றைய உல­கச் சூழ­லில், இது போன்ற நிலை­மை­கள் குறு­கிய
கால­கட்­டத்­தில் முடி­வுக்கு கொண்டு வரப்­ப­டக்­கூ­டும். குளிர்­கா­லத்­தில் துவங்­கிய
பிரச்­னை­கள், குளிர் விடு­வ­தற்­குள்முடிந்­தால், கோடை காலத்­தில், கச்சா எண்­ணெய் விலை, வீழ்ச்­சி­யைக் கூட சந்­திக்­க­லாம்.

சோதனை

எதை­யும் கணிக்க முடி­யாத ஒரு சூழ­லில் கச்சா எண்­ணெய் விலை இருக்­கிறது. இனி வரும் வாரங்­கள், கச்சா எண்­ணெய் சந்­தைக்கு சோத­னை­யான கால­கட்­ட­மாக அமை­யும். அதி­ல் இருந்து மீண்டு வர, இந்­தியா எப்­படி முயற்­சிக்­கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்­டும்.
நம் பொரு­ளா­தா­ரம், மேலும் பிரச்­னை­கள் அதி­க­ரிக்­காத வண்­ணம் இந்த கால­கட்­டத்தை கடக்க வேண்­டும்.



ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

shyamsek@ithought.co.in

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)