பதிவு செய்த நாள்
07 ஜன2020
23:39

புதுடில்லி:நாட்டின் நிதிப் பற்றாக்குறையை தடுக்கும் வகையில், செலவினங்களைக் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சமீப ஆண்டுகளில், நாட்டின் வரி வசூல் பெருமளவு குறைந்து வருகின்ற காரணத்தால், அரசு, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதன் செலவினங்களை குறைக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. கிட்டத்தட்ட, 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வருவாய் குறைந்துள்ள நிலையில், நிதிப்பற்றாக்குறையை தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்த செலவின இலக்கான, 27.86 லட்சம் கோடி ரூபாயில் கிட்டத்தட்ட, 65 சதவீதம் அளவுக்கு அரசு செலவிட்டு விட்டது. இருப்பினும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செலவழிக்கும் வேகத்தை குறைத்துள்ளது.செப்டம்பர் மாதத்தில், 3.1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கும் நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில், அரசின் செலவினம், 1.6 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
இப்போது குறைக்க திட்டமிடப்பட்டுள்ள, 2 லட்சம் கோடி ரூபாய் என்பது, ஆண்டுக்கான மொத்த செலவு இலக்கில், 7 சதவீதமாகும்.இதற்கிடையே, தனியார் முதலீடுகள் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில், அரசாங்கம் செலவினங்களை குறைப்பது, வளர்ச்சியை பாதிப்பதாக அமையும் என, சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|