பதிவு செய்த நாள்
07 ஜன2020
23:40

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின், ஜி.டி.பி., எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என, அரசு தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட, அரசின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் வளர்ச்சி, 6.8 சதவீதமாக இருந்தது. இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு, பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடப்பு நிதியாண்டில், ஜி.வி.ஏ., எனும், மொத்த மதிப்பு கூட்டல், 4.9 சதவீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.ஜி.வி.ஏ., என்பது, ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு ஆகும்.
கடந்த ஜூன், செப்டம்பர் காலாண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5 மற்றும் 4.5 சதவீதமாக, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவைக் கண்டது.இந்த சரிவுகளை அடுத்து, ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சியை, அதற்கு முந்தைய மதிப்பீடான, 7.4 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைத்து கணித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|