பதிவு செய்த நாள்
08 ஜன2020
23:35

சிறப்பு பொருளாதார மண்டலங்களாக அறிவிக்கப்பட்டவற்றை, பல துறை சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றி, அதற்கான அறிவிப்பாணையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, ஈரோடு, வேலுார், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், மின்னணு, மின்சாரம், பொறியியல், தோல், கிரானைட்ஸ் உள்ளிட்ட, எட்டு துறைகள் தொடர்பான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சிப்காட் எனும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமும், சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில், பல துறைகளை சார்ந்த தொழில் நிறுவனங்களை அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:சிறப்பு பொருளாதார மண்டலத்தில், குறிப்பிட்ட துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தற்போது பல துறை சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த பொருள் உற்பத்தி என்பது இல்லாமல், கூடுதலாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துறை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, இந்த பகுதியில் இடம் வழங்கப்படும்.தமிழகத்தில், சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 550 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|