பதிவு செய்த நாள்
08 ஜன2020
23:36

புதுடில்லி:எளிதாக தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் குறித்த, அடுத்த தர வரிசை பட்டியல், மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், எளிதாக தொழில் துவங்க ஏற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பட்டியலிட்டு, தர வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது.இந்நிலையில், அடுத்த பட்டியல், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் மட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:உள்நாடு மற்றும் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான வணிகச் சூழலை மேம்படுத்துவதில், மாநிலங்களுக்கு இடையே போட்டியை துாண்டும் வகையில், இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.கட்டுமான அனுமதி, தொழிலாளர் விதிமுறைகள், சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் வழங்குவது, ஒற்றை சாளர முறை என, பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில், ஆந்திர மாநிலம் முதலிடம் பிடித்தது. தெலுங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்கள், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தாமதமான பட்டியல் வெளியீடு, பிப்ரவரி அல்லது மார்ச்சில் வெளியாகும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|