பதிவு செய்த நாள்
08 ஜன2020
23:38

புதுடில்லி:‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் உற்பத்தி, கடந்த டிசம்பர் மாதத்தில், 7.88 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தம், 1.16 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
வாகனத் தேவை தொடர்ந்து, ஒன்பது மாதங்களாக குறைந்திருந்த நிலையில், உற்பத்தியும் குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர், டிசம்பர் இரு மாதங்களில், உற்பத்தி மீண்டும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த, 2018 டிசம்பரில், இந்நிறுவனம் மொத்தம், 1.07 லட்சம் வாகனங்களை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதத்தில், ‘காம்பாக்ட்’ கார்கள் பிரிவைச் சேர்ந்த, ‘வேகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், சுவிப்ட், பலேனோ, டிசையர்’ உள்ளிட்ட புதிய கார்கள் அதிகம் தயாரிக்கப்பட்டு உள்ளன. மொத்தம், 62 ஆயிரத்து, 448 வாகனங்கள் இப்பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும், நிறுவனத்தின் உற்பத்தி, 4.33 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|