தங்கம் விலை இன்று(ஜன.,10) சவரன் ரூ.96 சரிவுதங்கம் விலை இன்று(ஜன.,10) சவரன் ரூ.96 சரிவு ...   அன்னிய நேரடி முதலீடு விதிகளை தளர்த்த ஆலோசனை அன்னிய நேரடி முதலீடு விதிகளை தளர்த்த ஆலோசனை ...
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 1.8 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2020
00:03

புதுடில்லி:நாட்டின், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு நவம்பரில், 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது.


தயாரிப்பு துறை



மூன்று மாதங்கள் தொடர் சரிவுக்கு பிறகு, கடந்த நவம்பரில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதற்கு, தயாரிப்பு துறையில் வளர்ச்சி ஏற்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.கடந்த ஆண்டு நவம்பரில், வளர்ச்சி, 1.8 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், இதுவே, இதற்கு முந்தைய ஆண்டு, அதாவது, 2018 நவம்பர் மாதத்தில், வளர்ச்சி, 0.2 சதவீதம் அளவுக்கே உயர்ந்திருந்தது.


இதேபோல், தயாரிப்பு துறையின் வளர்ச்சி, கடந்த நவம்பரில், 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், வளர்ச்சி, 0.7 சதவீதம் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சுரங்க துறை வளர்ச்சி


மின்சார உற்பத்தி, மதிப்பீட்டு மாதத்தில், மைனஸ் 5 சதவீதமாக குறைந்துள்ளது.இதற்கு முந்தைய ஆண்டில், இதே மாதத்தில், இது, 5.1 சதவீதம் அதிகரித்திருந்தது. சுரங்க துறை வளர்ச்சியும் மதிப்பீட்டு மாதத்தில் குறைந்துள்ளது.தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், 0.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 5 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)