பதிவு செய்த நாள்
11 ஜன2020
00:09

புதுடில்லி:உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, கடந்த டிசம்பர் மாதத்தில், 1.24 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, ‘சியாம்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:
மோட்டார் சைக்கிள்
உள்நாட்டில், பயணியர் வாகன விற்பனை, கடந்த டிசம்பர் மாதத்தில், 1.24 சதவீத சரிவை கண்டுள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், மொத்தம், 2.36 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே டிசம்பர் மாதத்தில், மொத்தம், 2.39 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.
உள்நாட்டில், கார் விற்பனையானது, 8.4 சதவீதம் அளவுக்கு, கடந்த டிசம்பரில் குறைந்துள்ளது. கடந்த, 2018, டிசம்பரில், 1.55 லட்சம் கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில் மொத்தம், 1.42 லட்சம் கார்களே விற்பனை ஆகியுள்ளன.மோட்டார் சைக்கிள் விற்பனையை பொறுத்தவரை, கடந்த மாதம், 12.01 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. மொத்தம், 6.98 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில், இதே மாதத்தில் மொத்தம், 7.93 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
மதிப்பீட்டு மாதம்
மொத்த இருசக்கர வாகன விற்பனையை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில், 16.6 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த, 2018 டிசம்பரில், 12.59 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில்,மதிப்பீட்டு மாதத்தில் மொத்தம், 10.50 லட்சம் வாகனங்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.வர்த்தக வாகன விற்பனையை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில், 66 ஆயிரத்து, 622 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 12.32 சதவீதம் சரிவாகும்.
2.31 கோடி
அனைத்து வகை வாகனங்களின் விற்பனையில், கடந்த டிசம்பரில், 13.08 சதவீதம் அளவுக்கு சரிவு காணப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில், 14.06 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், அதற்கு முந்தைய ஆண்டின் டிசம்பரில், 16.17 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.
கடந்த, 2018ம் ஆண்டில், பயணியர் வாகன விற்பனை, 33.95 லட்சமாக இருந்த நிலையில், 2019ம் ஆண்டில், 12.75 சதவீதம் சரிவு கண்டு, 29.62 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன.இதேபோல், மொத்த வாகன விற்பனை, 13.77 சதவீதம் அளவுக்கு கடந்த ஆண்டில் சரிவை கண்டுள்ளது.
2019ம் ஆண்டில் மொத்தம், 2.31 கோடி வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இதுவே, இதற்கு முந்தைய, 2018ல், மொத்தம், 2.68 கோடி வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.இவ்வாறு சியாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|