தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 1.8 சதவீதம் உயர்வு தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 1.8 சதவீதம் உயர்வு ...   தங்க ஆபரணங்கள் வணிகம் சரிவு தங்க ஆபரணங்கள் வணிகம் சரிவு ...
அன்னிய நேரடி முதலீடு விதிகளை தளர்த்த ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2020
00:00

புதுடில்லி:அன்னிய முதலீட்டுக்கான விதிமுறைகளை, மேலும் தளர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த முயற்சியில் இறங்க அரசு திட்டமிட்டுள்ளது.

நேரடி முதலீடு

இது குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்க, மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீடுகளுக்கான விதிகளை மேலும் தளர்த்த உள்ளது. விமான போக்குவரத்து, காப்பீடு ஆகிய துறைகளில், அன்னிய நேரடி முதலீடுகள் அதிகம் வரும் வகையில் விதிகள் தளர்த்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிறுவனங்களில், அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு, 49 சதவீதம் என்பதை, 74 சதவீதமாக அதிகரிக்கலாம் என, மத்திய வர்த்தக துறை ஆலோசனை வழங்கி உள்ளது.இந்திய விமான நிறுவனங்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு அனுமதி வழங்குவது குறித்தும், ஆலோசனை செய்யப்படுகிறது.இவை தவிர, ரயில் போக்குவரத்து, கல்வி, வாடகை வீடுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசனையில் உள்ளது.

உள்நாட்டு உற்பத்தி

நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அன்னிய நேரடி முதலீட்டின் பங்கை, 6 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது.தற்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அன்னிய நேரடி முதலீட்டின் பங்கு, 2 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்
business news
புதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்
business news
பெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்
business news
புதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்
business news
டாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
rajan - erode,India
12-ஜன-202021:55:05 IST Report Abuse
rajan சுதேசி என்று முழக்கமிடும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் தன கொள்கையை முழுவதும் மாற்றி விதேசி என்று சொல்வது ஏன் காங்கிரஸ் ஆட்சியின் போடு ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் 24% அந்நிய முதலீடு அறிமுகப்படுத்தப்பட்டபோது கூச்சலிட்ட பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இப்போது எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறது சொல்வது ஒன்று செய்வது எதிர்மறை இரட்டை வேடம் தான் கொள்கையோ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)