பணியமர்த்தல் டிசம்பரில் அதிகரிப்பு பணியமர்த்தல் டிசம்பரில் அதிகரிப்பு ... வரி சேமிப்பு முத­லீட்­டில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் வரி சேமிப்பு முத­லீட்­டில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் ...
பால் துறையில் முதலீடு: தனியாருக்கு அரசு அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2020
00:07

புதுடில்லி,:பால் துறையில், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அதிக லாபம்

தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையை விட, அதிக லாபம் தரும் துறையாக பால் துறை இருக்கிறது. எனவே, தனியார் இத்துறையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இந்தியாவை, 350 கோடி லட்சம் ரூபாய் பொருளாதாரமாக மாற்றுவதற்காகவும், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிப்பதற்காகவும், அரசு இத்துறையில் அதிக நிதி வசதிகளை வழங்கி வருகிறது.


இந்த வாய்ப்பை, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அரசு எதிர்பார்க்கிறது.இது குறித்து, கால்நடைத் துறை செயலர் அதுல் சதுர்வேதி கூறியதாவது: நாட்டின் பால் துறையில் தனியார் முதலீடுகள் அதிகம் வருவதில்லை. இத்துறையில் செய்யப்படும் முதலீடுகளில் பெரும்பகுதி, அரசு நிதியாகும்.

வறுமை ஒழிப்பு

இந்த சமயத்தில், இந்த துறையில், தனியார் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க வேண்டிய தேவை உள்ளது.வெறும் வறுமை ஒழிப்புக்கான முயற்சியாக இதைப் பார்க்காமல், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கானதாக இந்த முயற்சியை பார்க்க வேண்டும். இந்த துறையில் செய்யப்படும் முதலீடுகள், தயாரிப்பு மற்றும் சேவைப் பிரிவில் கிடைப்பதை விட, அதிக வருமானம் தருவதாக இருக்கும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் பங்கை விட, பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள் துறையின் பங்கு அதிகமாகும். தோட்டத் துறையை விட, 50 சதவீதம் அதிகமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

உலகளவில், இந்தியா அதிக அளவு பாலை உற்பத்தி செய்கிறது. ஆண்டுக்கு, 1,720 டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், உலக அளவில், பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதியை பொறுத்தவரை, இந்தியாவின் பங்கு, 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:வருமான வரித் துறை, கடந்த ஏப்ரல், 8 முதல், ஜூன், 30 வரையிலான காலகட்டத்தில், வரி செலுத்திய, கிட்டத்தட்ட, 20 ... மேலும்
business news
கோவை:‘ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’ தாக்கல் செய்யாதவர்களுக்கான தாமத கட்டணத்தை, சரக்கு மற்றும் சேவை வரித் துறை, 500 ரூபாயாக ... மேலும்
business news
புதுடில்லி:‘ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்’ நிறுவனத்தில், தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டு ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, தொடர்ந்து, நான்காவது மாதமாக சரிவைக் ... மேலும்
business news
புது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)