பதிவு செய்த நாள்
13 ஜன2020
00:13

வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களுக்கான
வட்டி விகிதமும் குறைந்திருக்கிறது. வங்கி வைப்பு நிதிகளுக்கான சிறந்த வட்டி விகிதம்
என்பது, 6.25 சதவீத அளவில் இருக்கிறது. இந்த பின்னணியில், அஞ்சல் துறை வழங்கும் சிறு சேமிப்பு திட்டங்கள்ஈர்ப்புடையதாக அமைகின்றன. வைப்பு நிதியை விட கூடுதல்
பலன் அளிக்கும் சிறுசேமிப்பு திட்டங்கள் வருமாறு:
தேசிய சேமிப்பு சான்றிதழ்:
ஐந்தாண்டு கால முதலீட்டிற்குதயார் என்றால் தேசிய சேமிப்பு சான்றிதழ் ஏற்றது. இதன்
தற்போதைய வட்டி விகிதம், 7.9 சதவீதம். மேலும், இதற்கு வருமான வரி சலுகையும்
கோரலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும், 100 ரூபாய் ஐந்தாண்டுகளில், 146.25 ரூபாயாக அதிகரிக்கும். வேறு ஒருவருக்கும் மாற்றிக்கொடுக்கலாம்.
தொடர் வைப்பு நிதி: மாதந்தோறும் சிறிய தொகை முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு, ஆர்.டி., என சுருக்கமாக சொல்லப்படும் தொடர்பு வைப்பு நிதி ஏற்றது. குறைந்தபட்சமாக, 100 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி விகிதம், 7.2 சதவீதம். நாமினேஷன் வசதி உண்டு. மைனர் பெயரிலும் துவக்கலாம்.
சேமிப்பு திட்டம்: வயதானவர்களுக்கான பிரத்யேக திட்டமான சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம், 8.6 சதவீத வட்டி அளிக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முதலீடு
செய்யலாம். ஓராண்டுக்கு பின், முன்கூட்டியே கணக்கைமுடித்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.கணவன், மனைவி கூட்டாகவும் கணக்கு துவக்கலாம்.
பி.பி.எப்.,: பதினைந்து ஆண்டு கால முதிர்வு கொண்ட பி.பி.எப்., திட்ட முதலீட்டிற்கான
தற்போதைய வட்டி விகிதம், 7.9 சதவீதமாகும். ஓய்வு கால திட்டமிடலுக்கு உதவும் இந்த திட்டம் வரி சேமிப்பு நோக்கிலும் பலன் அளிப்பது. மூன்று ஆண்டுகளுக்கு பின் கடன் பெறும் வசதி, 7 ஆண்டுகளுக்கு பின் பகுதி விலக்கல் வசதியும் கொண்டது.
கிசான் விகாஸ் பத்திரங்கள்: இந்த பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு, 113 மாதங்களில் இரு மடங்காக உயரக்கூடியது. எனவே ஒரு லட்சம் முதலீடு செய்தால், 9 ஆண்டுகள்
5 மாதங்களில் இரண்டு லட்சமாகும். இதன் வட்டி விகிதமான, 7.6 சதவீதம் கூட்டு வட்டியில் ஆண்டுக்கு கணக்கிடப்படுகிறது. பத்திரங்களை மாற்றிக்கொடுக்கும் வசதியும் உண்டு.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|