பதிவு செய்த நாள்
13 ஜன2020
00:16

முன்கூட்டியே திட்டமிடாமல், கடைசி நேரத்தில் வரி சேமிப்பு முதலீடுகளை மேற்கொள்ளும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி ஒரு கண்ணோட்டம்.
நடப்பு நிதியாண்டு இன்னும் இரண்டு மாதங்களில் முடிய உள்ள நிலையில், வரி சேமிப்பு முதலீட்டை திட்டமிட்டு மேற்கொண்டவர்கள் எந்த பதற்றமும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், வரி சேமிப்பு முதலீட்டை இறுதி செய்யாமல் தள்ளிப்போட்டு வந்தவர்கள், கடைசி நேர பரபரப்புடன் இதற்கான வாய்ப்புகளை பரிசீலித்துக்கொண்டிருக்கலாம்.
நிதியாண்டு முடிவதற்குள் பொருத்தமான முதலீட்டை தேர்வு செய்வதோடு, அதற்கான தொகையையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது கூடுதல் சுமையாகலாம். அவசரத்தில் பொருத்தமில்லாத முதலீடுகளை தேர்வு செய்யாமல் இருப்பதிலும் கவனம் செலுத்த
வேண்டும்.
நிதி இலக்குகள்
வரி சேமிப்பு முதலீட்டை தேர்வு செய்வதற்கு முன், முதலில் ஒருவர் தான் செலுத்த
வேண்டிய வரிமற்றும் பொருந்தக்கூடிய கழிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும். மொத்த வருமானத்தில்,வழக்கமான கழிவு மற்றும் 80 சிபிரிவின் கீழ் வரும் பிடித்தங்கள் போக
எஞ்சியுள்ள வருமானம்,வருமான வரி உச்ச வரம்புக்குள்வந்தால் வரி செலுத்த வேண்டும்.
இந்த தொகை, 5 லட்சம்ரூபாய்க்குள் இருந்தால் வரி செலுத்த வேண்டாம். ஆனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். எனவே, ஒருவர் தனது வருமானத்திற்கு ஏற்ப வரி சேமிப்பு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
வரி சேமிப்புக்கான முதலீடு
என்றாலும், வரி சலுகை மட்டுமே அதன் பலனாக இருக்க கூடாது. எந்த முதலீடுமே நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பது அவசியம்.வரி சேமிப்பு முதலீடுகளுக்கும் நிதி
இலக்குகளை நிறைவேற்றும் வகையில் பலன் அளித்தால் மட்டுமேநீண்ட கால நோக்கில் பலன்அளிக்கும். உதாரணமாக, பி.பி.எப்.,-ல் செய்யப்படும் முதலீடு வரிச்சலுகை
அளிப்பதோடு, ஒய்வு கால திட்டமிடலுக்கும் உதவியாக இருக்கும்.
ஆனால், ஒரு சில முதலீடுகள் வரிச்சலுகை பெற உதவினாலும் நீண்ட கால நோக்கில் அதிக பலன் அளிக்கத்தவறலாம்.வருமான வரிச்சட்டம், 80 சி பிரிவின் கீழ், 1.50 லட்சம் வரையான முதலீட்டிற்கு வரிச்சலுகை பெற முடியும். கல்வி கட்டணம், பிஎப்., பிடித்தம், காப்பீடு
பிரிமியம், வீட்டுக்கடன் வட்டி போன்றவை இதில் அடங்கும். இவைத்தவிர எஞ்சிய தொகைக்கு முதலீடு செய்ய வேண்டும்.
வரிச்சலுகை
இதற்காக, பி.பி.எப்., முதலீடு அல்லது அஞ்சலக ஐந்தாண்டு வைப்பு நிதி போன்றவற்றை பரிசீலிக்கலாம். பி.எப்., உறுப்பினர்கள், தங்கள் பங்களிப்பை அதிகரிக்க வழி செய்யும், வி.பி.எப்., வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். வரிச்சலுகைக்கு பொருந்தும் மற்ற பிரிவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவ காப்பீட்டிற்கான பிரிமியம் தொகைக்கு, 80 டி பிரிவின் கீழ், 25 ஆயிரம் ரூபாய் வரை தனியே சலுகை கோரலாம். தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்.,ல் செய்யப்படும்
முதலீட்டிற்கு கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் வரை வரிச்சலுகை கோர முடியும்.ஓய்வு கால திட்டமிடலுக்கு ஏற்ப இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். ‘யூலிப்’ திட்டங்களையும் பரிசீலிக்கலாம். மூன்று ஆண்டு ‘லாக் இன்’ காலம் கொண்ட,‘இ.எல்.எஸ்.எஸ்.,’ எனப்படும் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் பங்குமுதலீட்டின் பலனை அளிக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|