கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ... நடப்பாண்டில் தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறையும் நடப்பாண்டில் தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறையும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2020
00:21

கச்சா எண்ணெய்

கச்சா எண்­ணெய் விலை, கடந்த டிசம்­பர் மாதம் முத­லா­கவே, உயர்ந்து வரு­கிறது. எண்­ணெய் உற்­பத்தி நாடு­களின் கூட்­ட­மைப்பு மற்­றும் ரஷ்யா ஆகி­யவை இணைந்து, உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு, விலை சரிவை கட்­டுப்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்றன. இதன் ஒரு பகு­தி­யாக, நடப்பு ஆண்­டில், ஜன­வரி முதல் ஜூன் வரை­யி­லான கால­க்கட்­டத்­தில், உற்­பத்­தியை மேலும் குறைக்க இருப்­ப­தாக, கடந்த டிசம்­ப­ரில் அறி­வித்­தன.

இதன் கார­ண­மாக, டிசம்­பர் முதல் வாரம் வரை, விலை உயர்ந்து வந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. முந்­தைய வாரத்­தில், அமெ­ரிக்கா, ஈரான் நாடு­க­ளுக்கு இடையே போர் மூளும் என்ற
அச்­சத்­தில், மள­ம­ள­வென விலை உயர்ந்­தது. இருப்­பி­னும், அமெ­ரிக்­கா­வின் எண்­ணெய்
உற்­பத்தி மற்­றும் இருப்பு அதி­க­ரித்­த­தன் கார­ண­மாக விலை சரிவு ஏற்­பட்­டது.

அமெ­ரிக்­கா­வில் இயங்­கி­வ­ரும் ஆழ்­கு­ழாய்கிண­று­களின் எண்­ணிக்கை, தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம்உள்­ளது. சவுதி அரே­பியா, ரஷ்யாமற்­றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­களின் மொத்த
உற்­பத்தி, ஒட்­டு­ மொத்த உல­கின் நுகர்வு தேவை­யில், 60 சத­வி­கி­தத்தை பூர்த்தி செய்­கிறது.

தங்கம் வெள்ளி

சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த இரண்டு, மூன்று வாரங்­க­ளாக, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை அதி­க­ரித்து, வர்த்­த­கம் ஆகி­வந்­தது.

அமெ­ரிக்­கா­வுக்­கும் ஈரா­னுக்­கும் இடை­யே­யான மோதல் கார­ண­மாக, தங்­கம், வெள்ளி விலை உயர்ந்­தது. ஆனால், கடந்த வாரம் வியா­ழ­னன்று, ஈரான் மீதான தாக்­கு­த­லுக்கு அமெ­ரிக்க பார்லிமென்டின் அனு­மதி கிடைக்­காத கார­ணத்­தால், போர் அபாய சூழல் தணிந்­தது. இதன் கார­ண­மாக, தங்­கம் விலை சற்று சரிந்து வர்த்­த­கம் ஆனது.

வர்த்­தக இறுதி நாளான வெள்­ளி­யன்று, அமெ­ரிக்­கா­வில், புதி­தாக பணி­யில் அமர்த்­தப்­பட்­ட­வர்கள் எண்­ணிக்கை குறித்த புள்­ளி­வி­ப­ரம் வெளி­யானது. அதில், எதிர்­பார்த்­ததை விட, எண்­ணிகை குறை­வாக இருந்­தது. இதன் கார­ண­மாக, அமெ­ரிக்கநாண­யத்­தின் மதிப்­பில் சரிவு ஏற்­பட்­டது.

இதன் விளை­வாக, பொருள் வாணிப சந்­தை­யில், டால­ருக்கு நிக­ரான அனைத்து கமா­டிட்டி பொருட்­களின் விலை­யும் சற்று உயர்ந்­தது. இதில், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­யும்
அதி­க­ரித்து வர்த்­த­க­மாகி, முடி­வுற்­றது.

வர்த்­தக மோதலை முடி­வுக்கு கொண்டு வரும் வகை­யில், கடந்த டிசம்­பர் மாதத்­தில், அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­களின் தலை­வர்­களும், பிர­தி­நி­தி­களும் முதல்­கட்ட பேச்சு
நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். அதன் விளை­வாக, இரு நாட்டு தலை­வர்­களும், இம்­மா­தம், 15ம் தேதிக்கு மேல் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட உள்­ள­னர்.இத­னால், இரு நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்சி அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தங்­கம் மற்­றும் வெள்ளி விலை சரி­வுக்கு இது ஒரு முக்­கிய கார­ண­மா­கும்.

உள்­நாட்டு ஆப­ரண சந்­தை­யில், தங்­கம் விலை, 1 பவுன், 31,000 ரூபா­யைக் கடந்­தது. டால­ருக்கு
நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு மற்­றும் சர்­வ­தேச சந்­தை­யில் தங்­கம் விலை உயர்வு ஆகிய இவ்­விரு கார­ணங்­க­ளால், நம் உள்­நாட்டு சந்­தை­யில், தங்­கம் விலை அதி­க­ரித்­தது.


செம்பு

செம்பு, வாரத்­தின் ஆரம்­பம் முதலே, விலை உயர்ந்த போக்­கில் வர்த்­த­கம் ஆனது. சீனா
மற்­றும்அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யே­யான பேச்சு, பலம் பெறும் என்ற
எதிர்­பார்ப்­பில், பொருள்சந்­தை­யில், கனி­மங்­களின் விலை­யில் சிறி­த­ளவு உயர்வு காணப்­பட்­டது.

தற்­போது முதல் படி­யாக, சீனா இறங்கி வந்து, அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யும், இரு முக்­கிய பொருட்­க­ளுக்கு, இறக்­கு­மதி வரியை விலக்­கி­யுள்­ளது. இத­னால்,சந்­தை­யில் சாத­க­மானசூழ்­நிலை ஏற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


மேலும், இரு நாடு­க­ளுக்கு இடையே உறவு சீர­டை­யும் என்­ப­தி­னா­லும், செம்பு விலை­யில் உயர்வு காணப்­பட்­டது.உல­கில், அதிக அள­வில் செம்பு உலோ­கத்தை, தொழிற்­சா­லைக்கு பயன்­ப­டுத்­தும் நாடு,சீனா­வா­கும். அந்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­வைத்தே, பெரும்­பா­லானகமா­டிட்டிபொருட்­களின் விலை மதிப்பு நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)