பதிவு செய்த நாள்
13 ஜன2020
00:25

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, கடந்த வாரம் தொடக்கத்தில் சரிந்து, வர்த்தகம் ஆனது. இதற்கு முந்தைய வாரம், ஞாயிறு அன்று, ஈரான் ராணுவ அதிகாரி, அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக,திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில், அனைத்துபங்குச் சந்தைகளும் சரிந்து வர்த்தகம் ஆகின.
இந்திய பங்குச் சந்தைகளும் இந்த தாக்கத்திலிருந்து தப்பிக்கவில்லை. பின்பு அதிலிருந்து மீண்டு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் உயர்ந்து வர்த்தகமாகியது. அதன் தொடர்ச்சியாக, வார இறுதி நாளான வெள்ளியன்று, நிப்டி குறியீடு, புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.
வரும், 31ம் தேதியன்று, ஐரோபிய யூனியனிலிருந்து, பிரிட்டன் வெளியேறிச் செல்வது
உறுதியாகி உள்ளது.ஈரான் மீதான தாக்குதலுக்கு, அமெரிக்க பார்லிமென்ட் எதிராக குரல் கொடுத்ததன் தொடர்ச்சியாக, போர் மூளும் அபாயம் நீங்கியுள்ளது. அடுத்து, வர்த்தகப் போர் குறித்த முதல்கட்ட உடன்படிக்கையில், அமெரிக்க அதிபர் கையெழுத்திட இருக்கிறார்.இந்த 3காரணங்களால், வார இறுதிநாட்களில், பங்குச் சந்தைகள் உச்சம் கண்டன. மேலும், அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து வருவதும், சந்தை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருக்கும் நிலையில், மத்திய புள்ளியியல் அலுவலகம், நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டு
அறிவித்துள்ளது. மற்றும் பல அமைப்புகளும், நாட்டின் வளர்ச்சியை, நடப்பு ஆண்டில் குறைத்தே மதிப்பீடு செய்துள்ளன.இப்படி ஒருபக்கம் வளர்ச்சி குறைவாக இருக்கும்
நிலையில், அதற்கு மாறாக, சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம்,
அன்னிய நேரடி முதலீடுகள் அதிகம் வருவது தான்.
மேலும், மியூச்சுவல் பண்டு திட்டங்களின் மூலமாக, பங்குச் சந்தைகளில் செய்யப்படும்
முதலீடும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட
முதலீடுகளை விட, டிசம்பர் மாதத்தில் செய்யப்பட்ட முதலீடுகள், மூன்று மடங்கு
அதிகரித்துள்ளன.இவ்வாறாக, மறைமுக பங்குச் சந்தை முதலீடுகள், அன்னிய நேரடி
முதலீடுகள், உள்நாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக, பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டு வருகிறது.
இன்று, டிசம்பர் மாதத்திற்கான, சில்லரை விலை பணவீக்க விகிதம் வெளிவர உள்ளது.
இதனைஅடுத்து, செவ்வாயன்று, மொத்த விலை பணவீக்க விகிதம், புதன் கிழமை அன்று, டிசம்பர் மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விபரம் ஆகியவை வெளிவர உள்ளன. இவற்றில் ஏற்படும் மாற்றங்கள், சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி ரெசிஸ்டென்ஸ், 12,312 மற்றும் 12,360 புள்ளிகள் ஆகும்.
சப்போர்ட், 12,195 மற்றும் 12,100 புள்ளிகள் ஆகும்.
முருகேஷ் குமார்
murukesh.kumar@choiceindia.com
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|