பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘கேம்ஸ்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘கேம்ஸ்’ நிறுவனம் ...  இருண்ட காலம் முடிவடைந்தாலும்... இருண்ட காலம் முடிவடைந்தாலும்... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2020
00:25

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, கடந்த வாரம் தொடக்­கத்­தில் சரிந்து, வர்த்­த­கம் ஆனது. இதற்கு முந்­தைய வாரம், ஞாயிறு அன்று, ஈரான் ராணுவ அதி­காரி, அமெ­ரிக்க படை­யி­ன­ரால் கொல்­லப்­பட்­டார். இத­னால் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழல் கார­ண­மாக,திங்­கள், செவ்­வாய் ஆகிய நாட்­களில், அனைத்துபங்­குச் சந்­தை­களும் சரிந்து வர்த்­த­கம் ஆகின.

இந்­திய பங்­குச் சந்­தை­களும் இந்த தாக்­கத்­தி­லி­ருந்து தப்­பிக்­க­வில்லை. பின்பு அதி­லி­ருந்து மீண்டு, புதன், வியா­ழன் ஆகிய நாட்­களில் உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது. அதன் தொடர்ச்­சி­யாக, வார இறுதி நாளான வெள்­ளி­யன்று, நிப்டி குறி­யீடு, புதிய வர­லாற்று உச்­சத்தை எட்­டி­யது.

வரும், 31ம் தேதி­யன்று, ஐரோ­பிய யூனி­ய­னி­லி­ருந்து, பிரிட்­டன் வெளி­யே­றிச் செல்­வது
உறு­தி­யாகி உள்­ளது.ஈரான் மீதான தாக்­கு­த­லுக்கு, அமெ­ரிக்க பார்லிமென்ட் எதி­ராக குரல் கொடுத்­த­தன் தொடர்ச்­சி­யாக, போர் மூளும் அபா­யம் நீங்­கி­யுள்­ளது. அடுத்து, வர்த்­த­கப் போர் குறித்த முதல்­கட்ட உடன்­ப­டிக்­கை­யில், அமெ­ரிக்க அதி­பர் கையெ­ழுத்­திட இருக்­கி­றார்.இந்த 3கார­ணங்­க­ளால், வார இறுதிநாட்­களில், பங்­குச் சந்­தை­கள் உச்­சம் கண்­டன. மேலும், அன்­னிய நேரடி முத­லீடு அதி­க­ரித்து வரு­வ­தும், சந்தை உயர்­வுக்கு கார­ண­மாக அமைந்­தது.

நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி மந்த நிலை­யில் இருக்­கும் நிலை­யில், மத்­திய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கம், நடப்பு நிதி­யாண்­டில், வளர்ச்சி, 5 சத­வீ­த­மாக இருக்­கும் என்று மதிப்­பிட்டு
அறி­வித்­துள்­ளது. மற்­றும் பல அமைப்­பு­களும், நாட்­டின் வளர்ச்­சியை, நடப்பு ஆண்­டில் குறைத்தே மதிப்­பீடு செய்­துள்ளன.இப்­படி ஒரு­பக்­கம் வளர்ச்சி குறை­வாக இருக்­கும்
நிலை­யில், அதற்கு மாறாக, சந்தை தொடர்ந்து உயர்ந்து வரு­வ­தற்கு முக்­கிய கார­ணம்,
அன்­னிய நேரடி முத­லீ­டு­கள் அதி­கம் வரு­வ­து­ தான்.

மேலும், மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களின் மூல­மாக, பங்­குச் சந்­தை­களில் செய்­யப்­படும்
முத­லீ­டும் அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக, கடந்த நவம்­பர் மாதத்­தில் செய்­யப்­பட்ட
முத­லீ­டு­களை விட, டிசம்­பர் மாதத்­தில் செய்­யப்­பட்ட முத­லீ­டு­கள், மூன்று மடங்கு
அதி­க­ரித்­துள்­ளன.இவ்­வா­றாக, மறை­முக பங்­குச் சந்தை முத­லீ­டு­கள், அன்­னிய நேரடி
முத­லீ­டு­கள், உள்­நாட்டு நிதி நிறு­வ­னங்­களின் முத­லீ­டு­கள் ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக, பங்­குச் சந்­தை­களில் ஏற்­றம் காணப்­பட்டு வரு­கிறது.

இன்று, டிசம்­பர் மாதத்­திற்­கான, சில்­லரை விலை பண­வீக்க விகி­தம் வெளி­வர உள்­ளது.
இத­னைஅ­டுத்து, செவ்­வா­யன்று, மொத்­த­ விலை பண­வீக்க விகி­தம், புதன் கிழமை அன்று, டிசம்­பர் மாதத்­திற்­கான நாட்­டின் ஏற்­று­மதி மற்­றும் இறக்­கு­மதி விப­ரம் ஆகி­யவை வெளி­வர உள்ளன. இவற்­றில் ஏற்­படும் மாற்­றங்­கள், சந்­தை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, நிப்டி ரெசிஸ்­டென்ஸ், 12,312 மற்­றும் 12,360 புள்­ளி­கள் ஆகும்.
சப்­போர்ட், 12,195 மற்­றும் 12,100 புள்­ளி­கள் ஆகும்.

முருகேஷ் குமார்

murukesh.kumar@choiceindia.com

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)