பதிவு செய்த நாள்
13 ஜன2020
00:31

தரவுகளை கூர்ந்து கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். எதை வைத்து, நம்முடைய பொருளாதார கருத்துக்கள் உருவாகின்றன என்பது மிக மிக்கியம்.
அரசியல் களத்தில், பொருளாதாரம் அதிகமாக பேசப்படும் போது, மிக நிதானமாகவும், கவனமாகவும் நம் முடிவுகளையும், அபிப்ராயங்களையும் முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும். நம் களம் குறித்த அறிதல் சரியாக அமைவதற்கு இது மிகவும் அத்தியாவசியமாகும்.டிசம்பர் மாதம், பொருளாதாரம் சற்றே சுதாரித்துக்கொண்டு எழுந்ததா என்ற கேள்விக்கு விடை சொல்வது, அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், மேலும் பொருளாதர சரிவு ஏற்படவில்லை என்பதை, பல தரவுகள் சொல்கின்றன.
மின் உற்பத்தி, வாகன உற்பத்தி, ஏற்றுமதி அளவீடுகள், சுரங்க உற்பத்தி ஆகியவை மீண்டு வருவதற்கான சூழல் தெளிவாக உருவாகி வருவது, ஓரளவு தெரிகிறது.டிசம்பர் மாதம், உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு நம்பிக்கை ஊட்டும் மாதமாக அமைந்ததாகவே அம்மாதத்தின் தயாரிப்புத்துறை வளர்ச்சி சொல்கிறது. இதன் தொடர்ச்சியாக வந்த, தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறியீடுகள், நாம் மிக மோசமான காலக்கட்டத்தை கடந்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியிருப்பதாகவே தெரிவிக்கின்றன.
நவம்பரில் வெளியான மின் உற்பத்தி, சுரங்க உற்பத்தி ஆகியவையும் சரிவை தடுக்கும் சூழல் உருவானதை உறுதிபடுத்தும் வகையில் அமைந்தன.உற்பத்தி வேகம் பிடிப்பதாகவே, உற்பத்திக்கான, பி.எம்.ஐ., குறியீடுகள் சொல்கின்றன. கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு, இந்த குறியீடு வளர்ச்சி கண்டு, 52.7 என்ற புதிய உச்சம் தொட்டது.வருங்கால உற்பத்தி சூழல் நன்றாக இருப்பதாக, நிறுவன மேலாளர்கள் நினைப்பது, இந்த ஆய்வில் தெளிவாகிறது.
இதற்கு முன்பு, ஜூன் 2012ல், 55.00 என்ற புள்ளியை தொட்டது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மீண்டும் துவங்குவதற்கு சற்றுமுன்னரே நடந்தது. அதேபோல, இந்த குறியீட்டின் மிக குறைந்த அளவு ஆன, 47.9ஐ எட்டிய நிகழ்வும், பொருளாதாரம் மீண்டும் சரிய துவங்கும் முன்பே, ஜூன் 2017ல் நடந்தது.ஆகவே, உற்பத்தி துறை மேலாளர்கள், வளர்ச்சி கூடுவதையும், குறைவதையும், சற்று முன்பே பார்த்து விடுவது தெளிவாகிறது.
கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு, இப்போது நம்பிக்கை வெளிப்படுவது ஒரு நல்ல சமிக்ஞை.இந்த போக்கு, தொடர்ந்து நிலைக்கவும்,லும் அதிகரிக்கவும் வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சேவைகளை வாங்கும் மேலாளர்களின் குறியீடு ( சர்வீஸஸ் பி.எம்.ஐ.,) சற்றே உயர்ந்து, டிசம்பரில், 53.3ஐ தொட்டது. ஆனாலும், நாட்டின் ஒட்டுமொத்த வணிக நம்பிக்கை கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழல் தொடர்வதும், நிலைப்பதும், மேலும் வலிமை பெற்று வளர்வதும் மிக அவசியம். அந்த விதத்தில், வரும் மத்திய பட்ஜெட் நம்பிக்கைக்கான ஒரு தாக்கத்தையும் ஊக்கத்தையும் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது.இருண்ட காலம் முடிவடைந்தாலும், பொருளாதார தேக்கம் விலகி, மீண்டும் வளர்ச்சியை கொண்டுவரக்கூடிய நம்பிக்கையை மக்கள் மனதில் விதைப்பது, வரும் பட்ஜெட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதற்கான கருத்து கேட்பு பணிகள் மிக தீவிரமாக நடந்து வருவது, எதிர்பார்ப்புகளை சற்று அதிகரிக்கச் செய்து இருக்கிறது. இனி வரும் வாரங்களில் நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் மாறுவது நிச்சயம். எதிர்காலத்தில் நமக்கு தேவையான வளர்ச்சி திரும்ப, அனைத்து தரப்பினரையும் இந்த மாற்றங்கள் ஊக்குவிக்க வேண்டும்.நம் முழு கவனமும், பொருளாதாரத்தின் மீது செலுத்துவதே, தற்போதைய முக்கிய தேவை.
பங்குச் சந்தை
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|