சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் அதிகரிப்பு : கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உயர்வுசில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் அதிகரிப்பு : கடந்த ஐந்து ஆண்டுகளில் ... ...  தங்கம் இறக்குமதி வரியை குறைக்க  வர்த்தக அமைச்சகம் பரிந்துரை தங்கம் இறக்குமதி வரியை குறைக்க வர்த்தக அமைச்சகம் பரிந்துரை ...
மொத்த விலை பணவீக்கம் 8 மாதங்களில் இல்லாத உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2020
23:38

புதுடில்லி:நாட்டின், மொத்த விலை பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தில், 2.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 8 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.

கடந்த நவம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.58 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் இது, 3.1 சதவீதமாக அதிகரித்து இருந்தது.இதுவே, 2018 டிசம்பரில், 3.46 சதவீதமாக இருந்தது.கடந்த டிசம்பரில், மொத்த விலை பணவீக்கம், 2.59 சதவீதமாக அதிகரித்ததற்கு முக்கிய காரணம், உணவுப் பொருட்களான வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை மிகவும் அதிகரித்ததாகும்.

உணவுப் பொருட்களின் பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தில், 13.12 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய மாதமான நவம்பரில், 11 சதவீதமாக இருந்தது.உணவு அல்லாத பொருட்களின் பணவீக்க விகிதம், நான்கு மடங்கு அதிகரித்து, 7.72 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த நவம்பரில், 1.93 சதவீதமாக குறைந்து இருந்தது.

உணவுப் பொருட்களில், காய்கறிகள் விலை, 69.69 சதவீதம் அளவுக்கு, டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு, வெங்காயத்தின் விலை ஏற்றம் முக்கிய காரணமாகும். வெங்காயத்தின் விலை, மதிப்பீட்டு மாதத்தில், 455.83 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து உருளைக்கிழங்கு, 44.97 சதவீதம் அளவுக்கு விலை அதிகரிப்பை கண்டது.

இதற்கிடையே, சில்லரை விலை பணவீக்கமும், கடந்த டிசம்பர் மாதத்தில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பால், சில்லரை விலை பணவீக்க விகிதம், 7.35 சதவீதமாக, டிசம்பர் மாதத்தில் உயர்வைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கோல்­கட்டா,: நாட்­டின் மிகப்­பெ­ரிய, ‘டிவி’ விற்­ப­னை­யா­ள­ரான, ‘சாம்­சங்’ நிறு­வ­னம், வெளி­நாட்­டி­லி­ருந்து ... மேலும்
business news
மும்பை:நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதியை, 2025ம் ஆண்டில், 5.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பதற்கான பட்ஜெட் ... மேலும்
business news
குவஹாத்தி:கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், குவஹாத்தி தேயிலை ஏல மையமான, ஜி.டி.ஏ.சி., நேற்று சிறப்பு ... மேலும்
business news
புது­டில்லி, :ஓட்­டல் மற்­றும் உண­வ­கங்­கள் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பான, எப்.எச்.ஆர்.ஏ.ஐ., தங்­கள் துறைக்­கென ... மேலும்
business news
புது­டில்லி:அஞ்­சல் துறை மூல­மாக நடை­பெ­றும் ஏற்­று­மதி தொடர்­பான சுங்க தக­வல்­களை, பரி­மா­றிக் கொள்­வ­தற்­கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)