பதிவு செய்த நாள்
14 ஜன2020
23:52
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’யின் தயாரிப்புகளில் ஒன்றான, ‘விட்டாரா பிரெஸ்ஸா’ கார் விற்பனை, ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது.
மாருதி சுசூகியின், காம்பாக்ட் எஸ்.யு.வி., வாகனமான விட்டாரா பிரஸ்ஸா, அறிமுகம் செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. இந்த காரை, 2016 வாகன கண்காட்சியின் போது மாருதி சுசூகி அறிமுகம் செய்தது.
இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின், விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனரான ஷஷாங் ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளதாவது:சுசூகி நிறுவனத்தின் முக்கியமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, மாருதி சுசூகி குழுவே வடிவமைத்து தயாரித்துள்ள வாகனமாகும்
விட்டாரா பிரெஸ்ஸா.அறிமுகம் செய்யப்பட்டு, 47 மாதங்களில், ஐந்து லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்கள் காம்பாக்ட் எஸ்.யு.வி., கார்களை எவ்வளவு விரும்புகின்றனர் என்பதற்கான சாட்சியாகும்.மேலும், காம்பாக்ட் எஸ்.யு.வி., கார்கள் பிரிவில், மிக வேகமாக இந்த கார் தான் விற்பனை ஆகியிருக்கிறது என்பதும் கூடுதல் சாதனை தான்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|