பதிவு செய்த நாள்
16 ஜன2020
01:48

புதுடில்லி:கடந்த 2019ம் ஆண்டிற்கான, அமெரிக்க காப்புரிமை பட்டியலில், அதிகம் காப்புரிமை பெற்ற நாடுகள் வரிசையில், இரண்டாவது இடத்தை, இந்தியா பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுக்கான, அமெரிக்க காப்புரிமை பட்டியலில், அதிகளவுக்கு காப்புரிமைகளை பெற்ற நிறுவனங்களில், முதலிடத்தை, ஐ.பி.எம்., நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம், 9,262 காப்புரிமைகளுக்கான அனுமதியைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவில், எந்த ஒரு நிறுவனமும் இதுவரை இத்தனை காப்புரிமைகளை பெற்றது இல்லை என்பது கூடுதல் சிறப்பு.ஐ.பி.எம்., நிறுவனம், கடந்த, 27 ஆண்டுகளாக, அமெரிக்காவில் காப்புரிமை பெறுவதில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஆண்டில், இந்தியாவிலிருந்து மட்டும், ஐ.பி.எம்., கண்டுபிடிப்பாளர்கள், 900க்கும் அதிகமான காப்புரிமைகளை பெற்றுள்ளனர்.இது, அமெரிக்காவுக்குப் பிறகு, உலகளாவிய எண்ணிக்கையில், இரண்டாவது அதிக பங்களிப்பாகும்.உள்கட்டமைப்பு செலவுகள், உள்கட்டமைப்புஅபாயங்கள், கண் தொடர்பு அடிப்படையிலான தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், இந்தியாவிலிருந்து காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|