பதிவு செய்த நாள்
21 ஜன2020
03:21

புதுடில்லி: ஐ.ஆர்.எப்.சி., எனும், இந்திய ரயில்வே நிதிக் கழகம், புதிய பங்குகளை வெளியிட அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பம் செய்துள்ளது.
ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருக்கும் நிலையில், 140.71 கோடி புதிய பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. மேலும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 93.80 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.இந்த பங்குகள் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, மூலதனத்தை பெருக்கிக் கொள்ளவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.டி.எப்.சி., செக்யூரிட்டீஸ், எச்.எஸ்.பி.சி., செக்யூரிட்டீஸ் அண்டு கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.இந்நிறுவனப் பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம், இந்திய ரயில்வேயின், நிதி சார்ந்த விஷயங்களை கையாண்டு வருகிறது. மூலதனச் சந்தைகள், பிற கடன்கள் மூலம் விரிவாக்கம் மற்றும் இந்திய ரயில்வே இயங்குவதற்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவது ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|