பதிவு செய்த நாள்
21 ஜன2020
03:23

சென்னை: இந்திய சர்வதேச தோல் கண்காட்சி, சென்னையில் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக, பிப்., 2ம் தேதி, ‘லெதர் பேஷன் ஷோ’ நடைபெறுகிறது.இந்திய
சர்வதேச தோல் கண்காட்சி, வரும், 31ம் தேதி முதல் பிப்., 3ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் 20 வெளிநாடுகளை சேர்ந்த, 450 நிறுவனங்கள், தங்களது பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர்.
அதே சமயம், இந்திய நிறைவுற்ற தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், லெதர் பேஷன் ஷோவும் நடைபெறுகிறது.இது குறித்து, இந்த சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:பிப்., 2ம் தேதி, சென்னையில், லெதர் பேஷன் ஷோ நடைபெற உள்ளது. தோல் காலணிகள், ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்பு தொழில்கள், சர்வதேச அளவில், பேஷன் துறையுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஷோவில், சர்வதேச அளவில், தற்போதைய போக்குகள், பாணிகள், வடிவமைப்புகள், சமீபத்திய வெளிப்பாடுகள் குறித்து காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், பைகள், காலணிகள் முதல், தோல் ஆடைகள் வரை கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|