பதிவு செய்த நாள்
21 ஜன2020
03:24

சென்னை: வரும், 2025க்குள், 10 ஆயிரம் மின்சார வாகனங்களை, பொருட்கள் வினியோகத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமேசான் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 2019ல், பொருட்கள் வினியோகத்திற்காக, பல்வேறு நகரங்களில், மின்சார வாகனங்களை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கார்பன் வெளியேற்றத்தையும், வினியோக நடவடிக்கைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் குறைப்பதே இதன் நோக்கம்.
இதையடுத்து, 2025ம் ஆண்டுக்குள், 10 ஆயிரம் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.இதற்கான வாகனங்கள், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில், பெங்களூரு, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட நகரங்களில், இந்த வாகனங்கள் இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|