பதிவு செய்த நாள்
21 ஜன2020
03:31

டாவோஸ்: –நம் நாட்டின், ஒரு சதவீத செல்வந்தர்களின் சொத்து மதிப்பு, 70 சதவீத ஏழைகளின் மொத்த சொத்தவிட, நான்கு மடங்கு அதிகம் என, ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின், 50வது ஆண்டு கூட்டத்தில், ‘கவனிப்பதற்காக நேரம்’ என்ற தலைப்பில், ஆக்ஸ்பாம் அமைப்பு, ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் உள்ள, 1 சதவீத செல்வந்தர்களின் சொத்து மதிப்பு, அந்நாட்டின், 95.3 கோடி ஏழைகளின் சொத்து மதிப்பை விட, நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது.இந்த, 95.3 கோடி வறியவர்கள் எண்ணிக்கை, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 70 சதவீதமாகும். மேலும், நாட்டின் பெரும் பணக்காரர்கள் அனைவரது மொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் முழு ஆண்டு பட்ஜெட் தொகையை விட அதிகமாகும்.இந்தியாவில் இருக்கும், 63 செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு, 2018 – 19ம் ஆண்டின் பட்ஜெட் தொகையான, 24.42 லட்சம் கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கிறது.
உலகளாவிய சமத்துவமின்மை அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரித்து உள்ளது.உள்நாட்டு வருமான சமத்துவமின்மை, பல நாடுகளில் குறிப்பாக, முன்னேறிய நாடுகளில் உயர்ந்துள்ளது. சில நாடுகளில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|