பதிவு செய்த நாள்
23 ஜன2020
01:31

புதுடில்லி : அடுத்த நிதியாண்டில், நாட்டின், ஜி.டி.பி., எனும், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.5 சதவீதமாக இருக்கும் என, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அடுத்த நிதியாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.5 சதவீதமாக இருக்கும்.நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கும் நிலையில், இது சற்று அதிகம் தான் என்றபோதிலும், பொருளாதார சரிவுக்கான ஆபத்து நீடிக்கும் என்றே கருதப்படுகிறது. எதிர்பார்ப்புபொருளாதார மந்தநிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க காரணங்களில் ஒன்று, நிதி சாரா நிறுவனங்கள் கடன் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சரிவாகும்.
மேலும், வங்கி கடன் வளர்ச்சி குறைவு, குடும்பங்களின் வருமானம் குறைந்தது, அதன் தொடர்ச்சியாக சேமிப்பும் குறைந்தது உள்ளிட்ட காரணங்களாலும் வளர்ச்சி குன்றியது. அடுத்த நிதியாண்டில் சிறிது முன்னேற்றம் இருக்கும் என்றாலும் கூட, இந்த மந்தநிலைக்கான காரணங்களும் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக, குறைவான நுகர்வு, முதலீட்டுக்கான தேவை குறைவு ஆகியவற்றில் இந்திய பொருளாதாரம் சிக்கியுள்ளது. உள்நாட்டு தேவையை மீண்டும் அதிகரிக்கும் வகையிலான கொள்கை முடிவுகளை, அரசு எடுக்க வேண்டும்.
அப்போது தான் பொருளாதார சுழற்சி சரியாகும்.அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அவை குறுகிய காலத்துக்கே உதவி புரிவதாக உள்ளது. எனவே, அனைவரது எதிர்பார்ப்புகளும், பிப்., 1ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டின் மீதே இருக்கிறது.அனைத்து பிரிவுகளிலிருந்தும் வரி வருவாயை அதிகரிப்பது, செலவுகளை சரியாக பகிர்வது உள்ளிட்டவற்றின் மூலமாக, அடுத்த பட்ஜெட்டை அரசு கட்டமைக்க வேண்டும்.
நேரடி வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, அடித்தட்டு மக்களின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். இதன் மூலம், அவர்களது நுகர்வையும், தேவையையும் அதிகரிக்கலாம்.பற்றாக்குறைஎனவே, கிராமப்புற உள்கட்டமைப்பு, சாலை கட்டுமானம், சகாய விலை வீடுகள் வழங்குவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நிதி நெருக்கடிகளையும் மீறி, உள்கட்டமைப்பு செலவினங்களில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் நம்பலாம்.
சில்லரை பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் ஆகியவை, 3.9 சதவீதம் மற்றும் 1.3 சதவீதமாக அடுத்த நிதியாண்டில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உலக சூழ்நிலை நிலவரங்கள் காரணமாக, நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 2 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, அமெரிக்கா – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த நிதியாண்டில், நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி, 7.2 சதவீதமாக அதிகரிக்கும்.
மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும், 2.32 லட்சம் கோடியாக குறையும். இது உள்நாட்டு உற்பத்தியில், 1.1 சதவீதமாகும்.இவற்றின் அடிப்படையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, அடுத்த நிதியாண்டில் சராசரியாக, 73 ரூபாயாக இருக்கும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|