பதிவு செய்த நாள்
24 ஜன2020
05:24

பெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், வளர்ச்சி கண்டு வருகின்றனர் என, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘அனராக்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது, 2022ல், நாட்டில் புதிதாக, 100 மால்கள் உருவாகும். நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் மட்டும், 69 புதிய மால்கள் மொத்தம், 3.55 கோடி சதுர அடிகளில் உருவாகிறது. மீதி, 31 மால்கள், ஆமதாபாத், இந்துார், சூரத் உள்ளிட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், மொத்தம், 1.35 கோடி சதுர அடியில் வரவிருக்கிறது.
தென் மாநிலங்களில் மட்டும் மொத்தம், 35 மால்கள் வருகின்றன; இவற்றின் பரப்பளவு, 1.7 கோடி சதுர அடியாகும்.நுகர்வு செலவுகள் குறைந்திருக்கும் நிலையிலும், குடும்ப பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகள், அழகு மற்றும் ஆரோக்கிய சேவைகள் ஆகிய பிரிவுகள் வளர்ச்சி பெற்றுள்ளன.அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால், வரும் காலாண்டுகளில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அனராக் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|