பதிவு செய்த நாள்
24 ஜன2020
05:26

புதுடில்லி: தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் நிறுவனமான, ‘டிரான்வே டெக்னாலஜிஸ்’ திங்கள் அன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 4.2 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, 42.40 லட்சம் புதிய பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. ஒரு பங்கின் முகமதிப்பு, 10 ரூபாய்.பங்கு வெளியீடு, திங்கள் அன்று துவங்கி, புதன் கிழமை அன்று முடிவடைகிறது. இந்நிறுவனம், தன் பங்குகளை, மும்பை பங்குச் சந்தையின், ‘ஸ்டார்ட் அப்’ பிரிவில் பட்டியலிட இருக்கிறது.
இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘பின்ஷோர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ நிறுவனம் நிர்வகிக்கிறது.டிரான்வே டெக்னாலஜிஸ் நிறுவனம், 2015ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த ஆண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 5 கோடி ரூபாய்.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, பணிபுரிவோர் எண்ணிக்கையை அதிகரித்து, சந்தையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|