பதிவு செய்த நாள்
24 ஜன2020
05:28

புதுடில்லி: ‘யெஸ் பேங்க் தோல்வியடைய அனுமதிக்கப்பட மாட்டாது’ என, எஸ்.பி.ஐ., வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:தனியார் துறை வங்கியான யெஸ் பேங்க், தோல்வியடைய அனுமதிக்கப்பட மாட்டாது. அதன் நிதி நிலைமையை சரி செய்வதற்கான வழி உருவாகும்.யெஸ் பேங்கின் வரவு – செலவு கணக்கு, 2.84 லட்சம் கோடி ரூபாயாகும். எனவே, இந்நிறுவனத்தை தோல்வியடைய விட்டுவிடக்கூடாது என எனக்கு தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.யெஸ் பேங்க் நிறுவனத்தின் பங்குகள் விலை, ஓராண்டில், 80 சதவீதத்துக்கும் மேலாக சரிந்ததுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிறுவனத்தின் நிறுவனர் ரானா கபூர் திடீரென வெளியேறியது, சொத்து தரம் சரிந்தது, வாராக்கடன் விவகாரம், மூலதனம் குறைந்தது என, பல சிக்கல்களில் சிக்கி உள்ளது இந்நிறுவனம்.தற்போது, மூலதனத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. கடந்த வாரம், இந்நிறுவனத்தின் நிர்வாக குழு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், இந்நிறுவனம் பங்குகளை விற்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், நிதிநிலையை சரி செய்யும் முயற்சியில் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|