பதிவு செய்த நாள்
24 ஜன2020
05:31

புதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டின், ஏழாம் கட்ட வெளியீடு மூலமாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதியில் இந்த வெளியீடு இருக்கும்.இம்மாதம், 30ம் தேதியன்று, துணிகர முதலீட்டாளர்களுக்கு முதற்கட்ட வெளியீடு இருக்கும். மறுநாள், நிறுவன முதலீட்டாளர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்த வெளியீட்டில் பங்கேற்கலாம்.
‘நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட்’ நிறுவனம், இந்த சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்கிறது.இதற்கு முன், ஆறு கட்டங்களாக நடைபெற்ற வெளியீடுகளுக்கு, முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது ஏழாவது கட்ட வெளியீட்டில் அரசு இறங்கி இருக்கிறது.இதற்கு முன் நடைபெற்ற ஆறு வெளியீடுகள் மூலம், மொத்தம், 49 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|