பதிவு செய்த நாள்
24 ஜன2020
05:34

புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை அதிகரிக்க வேண்டும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பு மேலும் கூறிஉள்ளதாவது:பணப்புழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது, இந்திய ரியல் எஸ்டேட் துறை. இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறையில் தேவையை மேலும் அதிகரிக்க உதவியாக, வீடு வாங்குவோருக்கு, அதிக வரிச் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
திட்டம்
இத்துறையின் தேவையை அதிகரிப்பதன் மூலமாக, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை குறைந்தபட்சம், 6 முதல், 7 சதவீதமாக அதிகரிக்கலாம். எனவே, அதற்கு உதவும் வகையிலான உறுதியான திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.இத்துறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது மற்றும் தேவையை அதிகரிப்பது ஆகியவற்றுக்கான முயற்சிகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.இதன் காரணமாக, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ், வீடு வாங்குபவர்களின் வருமான வரம்பை அதிகரிக்கவும், வீடு வாங்குபவர்களுக்கு, வரிச் சலுகைகளை அதிகரிக்கவும் அரசை வலியுறுத்தி உள்ளோம்.மேலும், பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரைகளின் ஒரு பகுதியாக, இந்த துறையை உயர்த்துவதற்கான செயல்திட்டமும் எங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பொறுத்தவரை, குறைந்த பட்சம், 6 முதல், 7 சதவீத வளர்ச்சியை பெற, ரியல் எஸ்டேட் துறையில் தேவையை அதிகரிக்க வேண்டும்.
வட்டி
அதற்கு, அரசு ஒரு தீர்மானமான திட்டத்தை வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்த துறையில் தேவைகள் அதிகரிக்கும்போது, முறையான மற்றும் முறைசாரா துறைகளில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். அது, நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்களிக்கும்.வீட்டுக் கடனை பொறுத்தவரை, வீட்டுக் கடனின் வட்டிகளுக்கு அதிகபட்ச விலக்கை, 2 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.
மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், எம்.ஐ.ஜி., ஒன்று மற்றும் இரண்டு பிரிவுகளில் உள்ள வருமான அளவுகோலை, 12 மற்றும் 18 லட்சம் ரூபாயிலிருந்து, 18 மற்றும் 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.இதன் மூலம் பரந்துபட்ட மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர். இது, வீடுகளுக்கான தேவையை அதிகரிக்க உதவும். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.இவ்வாறு இந்திய தொழிலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|