தொழில் கடன் ஐ.ஓ.பி., தீவிரம் தொழில் கடன் ஐ.ஓ.பி., தீவிரம் ...  கண் திறப்பாரா நிதி அமைச்சர்? கண் திறப்பாரா நிதி அமைச்சர்? ...
இந்திய பட்ஜெட்டும் கொரோனா வைரஸும
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2020
04:57

கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள், சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்களை பெரிதும் பாதித்துவிட்டன. பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டன.


புத்தாண்டு விடுமுறைக்கு சென்றோர், அந்தந்த ஊர்களிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதும், கண்டுபிடிக்கப்பட்ட நகரங்களில் கட்டுப்படுத்தபடுவதும் உடனடியாக நடந்தேற வேண்டும்.இந்த வைரஸ் குறித்து அதிகம் வெளியே தெரியாத போதிலும், அது எளிதில் பரவக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த வைரஸின் பொருளாதார தாக்கம், வரும் வாரங்களில் தெரிய வரும்.வர்த்தகம், உற்பத்தி, சுற்றுலா, முதலீடு என்று பல்வேறு விதங்களில் சீனா பாதிப்புக்கு உள்ளாகும்.

பாதிக்கும்
மேற்கத்திய நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி, உறுதியாக குறையும். இது ஏற்கனவே, வளர்ச்சி குறைந்து காணப்படும் சீன பொருளாதாரத்தை, மேலும் வலுவிழக்கச் செய்யும். சுற்றுலா பெரிதும் பாதிக்கப்படுவது நிச்சயம்.மற்ற ஜனநாயக நாடுகளில் வரும் தகவல்களும், தரவுகளும் நம்பத் தகுந்தவை. ஆனால், சீனாவில் இருந்து வரும் தகவல்களின் நம்பகத்தன்மை மிக குறைவு. ஆகவே, ஒருவேளை கள நிலவரம் முன்னேற்றம் அடைந்தாலும், அதை உலக நாடுகள் எளிதில் நம்பப்போவதில்லை. அதற்கு, சீன அரசு இரட்டிப்பாக பாடுபட வேண்டும்.

ஆகவே, பதிக்கப்பட்ட மாகாணங்கள் மட்டும் இன்றி,மொத்த சீன பொருளாதாரமும் இந்த வைரஸின் தாக்கத்தால் நலிவுறும். சுற்றுலா முழுதும் பாதிக்கப்படும். ஏற்றுமதி வர்த்தகம் வேறு நாடுகளுக்கு மாற்றப்படும். சுற்றுலா பயணியர் ஒரு புதிய இடம் தேடி போவார்கள். சகஜ நிலை திரும்ப, ஓரிரு ஆண்டுகள் ஆகக்கூடும். ஏற்றுமதி குறைவதால் உருக்கு போன்ற அடிப்படை பொருட்களின் உற்பத்தி குறையும். இந்த உற்பத்தி குறைப்பு, கச்சா எண்ணெய், மூலப்பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதியை குறைக்கும்.

ஆகவே, இந்த வைரஸின் தாக்கம், சீனாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் இதர மூலபொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளையும் பெரிதும் பாதிக்கும். தெளிவுபடுத்தும் இந்த தொடர் சங்கிலி போன்ற பாதிப்பு, வரும் வாரங்களில் நமக்கு வெளிப்படும்.சீன அரசின் வைரஸ் கட்டுப்பாட்டு எதிர் நடவடிக்கைகளின் தாக்கம் இந்த பிரச்சனை எந்த திசையில் போகிறது என்று, நமக்கு தெளிவுபடுத்தும்.

இடைக்காலத்தில், பட்ஜெட் மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்து, இந்தியா, மேலும் தன் வர்த்தக சூழலையும், ஏற்றுமதி சூழலையும் வலுவடையச் செய்ய, இது ஓர் அரிய வாய்ப்பு.வரும் வாரங்கள், நம்முடைய அரசின் முயற்சிகள் எந்த அளவு உலக அரங்கில் தாக்கம் ஏற்படுத்தின என்பதை, நமக்கு தெளிவுபடுத்தும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)