பதிவு செய்த நாள்
30 ஜன2020
02:19

திருப்பூர் : ஆயத்த ஆடைகளுக்கான, ‘டியூட்டி டிராபேக்’ உயர்த்தப்பட்டுள்ளது. இதை, மேலும் அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் முறையிட உள்ளதாக, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் செலுத்தும் வரிகளை, மத்திய அரசு, ‘டியூட்டி டிராபேக்’ என்ற பெயரில் திரும்ப வழங்குகிறது. ஆண்டுதோறும் இந்த சலுகை விகிதம் மாற்றியமைக்கப் படுகிறது. பருத்தி நுால் ஆடைக்கான டியூட்டி டிராபேக், 0.2 முதல் 0.3 சதவீதம்; கலப்பு நுாலிழை ஆடைக்கு, 0.3 முதல் 0.6 சதவீதம் வரை உயர்த்தி, மத்திய நிதித்துறை அமைச்சகம், நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
இது, பிப்., 4 முதல் அமலுக்கு வருகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் என்ற, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:டியூட்டி டிராபேக் உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. உலகளாவிய நாடுகளுடனான வர்த்தக சவால்களை எதிர்கொள்வதற்கு, அரசு சலுகைகளே ஏற்றுமதியாளர்களுக்கு கைகொடுக்கின்றன.இருப்பினும், தற்போதைய டிராபேக் உயர்வு விகிதம் போதுமானதாக இல்லை. ஆடை மதிப்பில் மொத்தம், 3 முதல், 4 சதவீதம் வரை வழங்க வேண்டும். இது குறித்து அரசிடம் முறையிட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|