பதிவு செய்த நாள்
04 பிப்2020
01:45

புதுடில்லி:நடப்பு ஆண்டில், ரிசர்வ் வங்கி, அதன் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என, பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கான, 3.5 சதவீதத்தை எட்டுவது என்பது சவாலான ஒன்றாகும். மேலும், பணவீக்கத்தின் தாக்கமும் அதிகரிக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.அரசால், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, அதன் நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்ட முடியவில்லை.
இந்நிலையில், ஏற்கனவே பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் சவுகரியமான நிலையில் இல்லை என்பதால், வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ‘கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம், இந்த ஆண்டில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், பேங்க் ஆப் அமெரிக்கா, டி.பி.எஸ்., வங்கி ஆகியவை, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|