பதிவு செய்த நாள்
04 பிப்2020
01:52

புதுடில்லி:‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிர்வாகக் குழுவிலிருந்து, அனில் அம்பானியின் மகன்களான, அன்மோல், அன்சுல் ஆகியோர் ராஜினாமா செய்துஉள்ளனர்.நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இவ்விருவரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, பங்குச் சந்தைகளுக்கு தகவல் தெரிவித்துள்ள, ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், ஜனவரி, 31ம் தேதியிலிருந்து இருவரும் பதவியிலிருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளது.பதவி விலகலுக்கான காரணம் என்ன என்பது குறித்து, அந்த அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த ஆண்டு, அக்டோபர், 9ல், அனில் அம்பானியின் மகன்கள் இருவரும், செயல் சாரா இயக்குனர்களாக, ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிர்வாகக் குழுவில் இணைந்தனர்.கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற, ரிலையன்ஸ் குழும ஆண்டு பொதுக் கூட்டத்தில், ரிலையன்ஸ் பவர் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவன நிர்வாகக் குழுவில், அனில் அம்பானியின் மகன்கள் பொறுப்பேற்க வேண்டும் என, பங்குதாரர்கள் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது.
தற்போது, 27 வயதாகும் அன்மோல், ரிலையன்ஸ் கேப்பிட்டலின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். 24 வயதாகும் அன்சுல், பாதுகாப்பு வணிகத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|