பதிவு செய்த நாள்
04 பிப்2020
12:16

மும்பை : பட்ஜெட் தாக்கலுக்கு பின் இந்திய பங்குச்சந்தைகள் இரு தினங்களாக சற்று மந்தமாக இருந்த நிலையில் இன்று(பிப்., 4) ஒரே நாளில் அதிக ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 800 புள்ளிகளும், நிப்டி 200 புள்ளிகளும் ஏற்றம் கண்டன.
கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சரிந்ததாலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டதாலும், மார்ச் மாதத்திற்கான டிவிண்ட் வர உள்ள நிலையில் பட்ஜெட்டில் டிவிடண்ட் விநியோக வரி ரத்து செய்யப்பட்டதாலும், உலகளவில் பங்குச்சந்தைகள் அதிக ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் ஆரம்பமாகின.
வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 393 புள்ளிகளும், நிப்டி 118 புள்ளிகளும் உயர்ந்த நிலையில் 11.50 மணியளவில் சென்செக்ஸ் 800 புள்ளிகளும், நிப்டி 235 புள்ளிகளும் உயர்வுடன் வர்த்தகமாகின. இதன்மூலம் மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு 90 நிமிடங்களில் 2 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்து, அதன் சந்தை மதிப்பு 155.72 லட்சம் கோடியாக அதிகரித்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|