பதிவு செய்த நாள்
04 பிப்2020
16:58

தென்னை நாரில் பலகை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்; நாட்டுக்கும் ஏராளமான அந்நியச் செலாவணி கிடைக்கும்' என்கின்றனர், தொழில் துறையினர்.
நாட்டின் தென்னை நார் உற்பத்தியில், 60 சதவீதம் கோவை மாவட்டத்தில் கிடைக்கிறது. இதில், பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியே, பெரும் பங்களிக்கிறது. தென்னை நார் கொண்டு, மரம், செடி வளர்ப்புக்கு உதவும் வகையில் பல்வேறு உப பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.நார் பயன்படுத்தி, பலகை செய்தால், பர்னிச்சர் செய்வதற்கும், வீடு கட்டும் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும்.மத்திய அரசு, எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம் - கயிறு வாரிய உதவியுடன், நார் கொண்டு பலகை தயாரிக்கும் தொழிற்கூடங்களை தொடங்க உதவுகிறது. 'கிளஸ்டர்' எனப்படும் கூட்டுக்குழுமங்களை கொண்டு, இதற்கான உற்பத்தியை தனியார் தொழில் முனைவோர் தொடங்கலாம்.
இதற்கான, கிளஸ்டரில் பங்கேற்போர் இணைந்து, நிலம் வாங்க வேண்டும். அதில், கட்டடத்துக்கு, 75 சதவீதம் மானியம்; இயந்திரங்களுக்கு, 75 சதவீதம் மானியம்; விற்பனை செய்வதற்கும் மானியம் கயிறு வாரியம் மூலம் அளிக்கப்படுகிறது.கூட்டுக்குழுமங்களுக்காக, வரும், 23ம் தேதி பெங்களூருவில், 'சென்ட்ரல் காயர் ரிசர்ச் இன்ஸ்டிடிட்யூட்' நிறுவனத்தில் பயிலரங்கு நடக்கிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு மொத்த தொழில்நுட்பம், தேவையான அனைத்து உதவிகளையும் கயிறு வாரியம் செய்து கொடுக்கிறது.
தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்க தலைவரும், மத்திய கயிறு வாரிய உறுப்பினருமான கவுதமன் கூறியதாவது:பொள்ளாச்சியில் மட்டும் ஒரு நாளைக்கு, 1,300 டன் தென்னை நார் உற்பத்தியாகிறது. இதை பயன்படுத்தி, 8 அடி நீளம், 4 அடி அகலத்தில், ஒரு நாளைக்கு 37,000 மரப்பலகை தயார் செய்ய முடியும்.இதை பயன்படுத்தி, வீட்டுக்கு தேவையான பர்னிச்சர் அனைத்தும் செய்ய முடியும். பர்னிச்சர்கள், கரையான் அரிக்காதவை. தினமும், 37,000 மரப்பலகை செய்யும்போது, 2 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு உருவாகும்.தமிழகத்தில் இந்த மரப்பலகை செய்வதற்கு, சேலம், மதுரையில் தலா ஒரு கிளஸ்டர் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்னும் அவர்கள் உற்பத்தியை வணிக அடிப்படையில் துவங்கவில்லை.
பொள்ளாச்சியில் தனியார் தொழில் முனைவோர், முன்வந்து கிளஸ்டர் துவங்கினால், அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.இதனால், இளநீர், தேங்காயை போல், மட்டையிலும் நல்ல வருமானம் பெறலாம்.அத்துடன், நாட்டில் இருக்கும் மரங்கள் பாதுகாக்கப்படும். அதன் மூலம் உலகம் வெப்ப மயமாதலை தடுக்க முடியும். பிளாஸ்டிக் பயன்பாட்டையும் தவிர்க்கலாம். 'கார்பன் கிரெடிட்'டை நாம் அதிகப்படியாக பெறவும் முடியும்.நார் கொண்டு பலகை செய்யும் தொழில் துறையில் நாம் வளர்ந்தால், உலகின் பர்னிச்சர் தேவையில் பெரும்பகுதியை நாம்மால் பூர்த்தி செய்ய முடியும்.இவ்வாறு, கவுதமன் கூறினார்.
மரங்கள் தப்பும்!நாட்டில், தினமும், 17 ஆயிரம் மரங்கள் பல்வேறு காரணங்களுக்காக வெட்டி வீழ்த்தப்படுகின்றன. இதில், பர்னிச்சர், வீடு கட்டுவதற்காக மட்டுமே, 10 ஆயிரம் மரங்கள் வெட்டப்படுகின்றன.'தென்னை நார் மதிப்பு கூட்டினால், மரங்களை வெட்ட வேண்டிய அவசியமே இருக்காது. தேவையான அனைத்து பர்னிச்சர்களையும் செய்ய முடியும்' என்கின்றனர் தொழில் துறையினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|