வாடகை வருமானத்துக்கும் வரிபிடித்தம் இருக்குங்க!வாடகை வருமானத்துக்கும் வரிபிடித்தம் இருக்குங்க! ... ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்கல் தேதி மாற்றியமைப்பு ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்கல் தேதி மாற்றியமைப்பு ...
‘கிரில்’ தொழிலுக்கு ‘பவர்’ தரும் ‘டேரிப்’ மாற்றம்: தயாரிப்பாளர்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
17:08

கட்­ட­டத்­தின் பாது­காப்பு மற்­றும் அழ­கு­ப­டுத்­தும் வகை­யில், ‘கிரில்’ பாகங்­கள் முக்­கிய பங்­கு­ வ­கிக்­கின்­றன. தமி­ழ­கத்­தில் அழகு பாகங்­கள், பாது­காப்பு ரீதி­யான பாகங்­கள் ஆகி­ய­வற்றை வார்ப்பு இரும்பு உலோ­கங்­கள், ‘ஸ்டெ­யின்­லெஸ் ஸ்டீல்’ உள்­ளிட்­டவை மூலம் கிரில் பாகங்­கள் தயா­ரிக்­கும் தொழிற்­கூ­டங்­கள் உரு­வாக்­கிவ­ரு­கின்­றன.
மாநி­லம் முழு­வ­தும் உள்ள ஒரு லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட கிரில் தயா­ரிப்பு தொழிற்­கூ­டங்­களில், கோவை மாவட்­டத்­தில் உள்ள, 3200 தொழிற்­கூ­டங்­களும் அடங்­கும். இந்­நி­லை­யில், கிரில் தொழி­லா­ளர்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­களில் ஒன்­றான, மின் கட்­ட­ணத்­துக்­கான, ‘டேரிப்’பை மாற்­றி­ய­மைத்து கிரில் தொழி­லுக்கு அரசு ‘பவர்’ அளித்­துள்­ளது.
கோவை மாவட்ட கிரில் தயா­ரிப்­பா­ளர்­கள் நலச்­சங்க நிறு­வ­னர் தலை­வர் ரவி கூறி­ய­தா­வது:கிரில், வெல்­டிங் குறுந்­தொ­ழி­லுக்கு பயன்­ப­டுத்­தும் மின்­சார கட்­ட­ணத்தை, 500 யூனிட் வரை இல­வ­ச­மா­க­வும், மின் கட்­ட­ணத்­துக்­கான, 3பி ‘டேரிப்’பில் இருந்து, 3ஏ ஆக மாற்­றித்­தர அர­சி­டம் வேண்­டு­கோள்­வி­டுத்­தோம். 500 யூனிட் வரை இல­வச மின்­சா­ரம் அளிப்­பது அர­சின் கொள்கை முடிவு என தமிழ்­நாடு மின் உற்­பத்தி பகிர்­மான கழ­கம் தெரி­வித்­துள்­ளது.பொருட்­கள் உற்­பத்தி அல்­லது தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்ள குடிசை, குறுந்­தொ­ழில்­கள், குறுந்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்கு, 12 கிலோ­வாட்­டுக்கு மிகா­மல் இருப்­பின், 3ஏ(I)ல் மின் இணைப்பு வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது. ‘வெல்­டிங்’ மூலம் தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு வசூ­லிக்­கப்­பட்­டு­வந்த, 3பி டேரிப் தற்­போது, 3ஏ(I) ஆக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது; இது, மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது.
இது­வரை, ஒரு யூனிட்­டுக்கு(ஜி.எஸ்.டி., உட்­பட), 10 ரூபாய், 40 காசு மின் கட்­ட­ணம் செலுத்­தி­வந்­தோம். மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட டேரிப்­பின் படி இதில் பாதி கட்­ட­ணம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும்; கிரில் தொழில் வளர்ச்­சிக்கு இது உத­வும்.இவ்­வாறு, ரவி கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)