பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:09
சரக்கு மற்றும் சேவை வரியானது (ஜி.எஸ்.டி.,), ஜி.எஸ்.டி.ஆர்., 1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) ஆகிய இரு பிரிவுகளில் மாதம் தோறும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) பொறுத்தவரை மாதம்தோறும், 20ம் தேதிக்குள் தாமத கட்டணம் இல்லாமல் தாக்கல் செய்யலாம்.
ஆனால், வரி செலுத்துவோர் பெரும்பாலும் கடைசி நேரத்தில் தாக்கல் செய்வதால், ‘சர்வர்’ பிரச்னை, குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாத பட்சத்தில் தாமத கட்டணம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. வரி செலுத்துவோர் வசதிக்காக ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்கல் செய்யும் தேதிகளில் ஜி.எஸ்.டி., கவுன்சில் சில மாற்றங்கள் செய்துள்ளது.
அதன்படி ஆண்டு வருவாய், 5 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் மாதம்தோறும், 20ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் மாற்றமில்லை; 5 கோடி ரூபாய்க்கும் கீழ் வருவாய் உள்ளவர்கள் இரு பிரிவுகளில் செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், ஆந்திரா உட்பட, 15 மாநிலங்களை சேர்ந்த, 5 கோடி ரூபாய்க்கும் கீழ் வருவாய் உள்ளவர்கள், மாதம் தோறும், 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.ஜம்மு– காஷ்மீர், லடாக், பஞ்சாப், ராஜஸ்தான், டில்லி, பீகார், திரிபுரா, இமாச்சலபிரதேசம், சண்டிகர், அரியானா, சிக்கிம், அருணாச்சலபிரதேசம் என இதர, 22 மாநிலங்களை சேர்ந்து, 5 கோடிக்கும் கீழ் ஆண்டு வருவாய் உள்ளவர்கள், 24ம் தேதி வரை ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்கல் செய்யலாம் என, தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கோவை ஜி.எஸ்.டி., ஆணையரக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாதம்தோறும், 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர், 5 கோடிக்கும் அதிகமான வருவாய் உடன் ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்கல் செய்து வருகின்றனர். 5 கோடிக்கும் குறைவான வருவாய் உடன், 95 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்கல் செய்துவருகின்றனர். இறுதி நேரத்தில் ஏற்படும் அலைச்சலையும், சிரமத்தையும் தவிர்க்க இதற்கான தாக்கல் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|