பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:14

உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும், எம்.எஸ்.எம்.இ., (MSME) எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகள், உள்நாட்டு உற்பத்தியில் 29 சதவீதம், வேலைவாய்ப்பில் 41 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
ஐந்து டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கி இந்திய பொருளாதாரம் பயணிக்கும் வேளையில், எம்.எஸ்.எம்.இ., அமைப்புகளை ஊக்குவிக்க, பல மானிய திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. அதில் ஒன்றான, கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம் (CLCSS - Credit linked capital subsidyscheme) பற்றி காணலாம்.
மானிய நோக்கம்எம்.எஸ்.எம்.இ., மூலம் உள்நாட்டு உற்பத்தியை (GDP) 50 சதவீதத்திற்கு உயர்த்தவும், ஏற்றுமதியை 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் ஆக உயர்த்தவும் இந்தத் திட்டத்திற்காக,2,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 15 சதவீதம் வெளிப்படையான மூலதன மானியத்தை வழங்குவதன் மூலம் எம்.எஸ்.எம்.இ., அமைப்புகளில் தொழில் நுட்ப மேம்பாட்டை எளிதாக்குவதே இதன் நோக்கம்.
கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம் என்றால் என்ன?புதிதாக தொழில் துவங்கவும், இயந்திரங்களை புதுப்பிக்கவும், வாங்கும் கடனில், 15 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.அதிகபட்சம், ஒரு கோடி ரூபாய் வாங்கும் கடனுக்கு இந்த திட்டம் பொருந்தும். உதாரணமாக ஒருவர் வாங்கும் 50 லட்சம் ரூபாய் கடனில், கடனுக்கு, 7.5 லட்சம் ரூபாய் மானியமாக அரசு வழங்கும். இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்யவேண்டும்.
யார் விண்ணப்பிக்க முடியும்? உற்பத்தி மற்றும் சேவை தொழில் புரிபவர்கள் இதை பயன்படுத்தலாம். தனிநபர்/ கூட்டாண்மை/ தனியார் நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்களும், கூட்டுறவு சங்கங்களும் இதில் விண்ணப்பிக்க தகுதியுடையவை. குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை.எம்.எஸ்.எம்.இ., வணிக திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியான உத்யோக் ஆதார் (UAM - UdyogAadhar Memorandum) எண்ணைக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பெறும் வணிக நிறுவனங்கள், தங்களது புதிய அல்லது இருக்கும் ஆலை மற்றும் இயந்திரங்களை சமீபத்திய அதிநவீன கருவிகளுக்கு மேம்படுத்த வேண்டும்.
அரசு வழங்கும் சலுகைகள்*புதியதாக தொழில் தொடங்க அல்லது புதுப்பிக்க இந்த கடன் பெறலாம்.*எஸ்.சி., / எஸ்.டி.,க்கு 15 சதவீதம் மானியத்துடன் கூடுதலாக, 10 சதவீதம் மானியம்*புதிய இயந்திரம் வாங்க.*சுங்கச்சாவடிகள், ரசாயனம், உள்கட்டமைப்பு ஆகியவை இயந்திர வரையறையின் கீழ் இல்லை.*கொள்முதல் (hire-purchase), குத்தகை போன்ற தொழில்களுக்கு இது பொருந்தாது.
கடன் பெறுவது எப்படி?CLCSS-ன் கீழ் மானியம் கோர, எம்.எஸ்.எம்.இ., அமைப்புகள் முதன்மை கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் இணைக்கப்பட்ட நோடல் ஏஜன்சிக்கு ஆன்-லைன் விண்ணப்பம் மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலம் முதன்மை கடன் வழங்கும் நிறுவனங்களால் பதிவேற்றப்படுகிறது, பின்னர் மானியத்தை வெளியிடுவதற்கு பரிந்துரைக்கிறது. இந்தியாவில் தற்போது SIDBI உட்பட 11 நோடல் ஏஜன்சிகள் உள்ளன.
மேலும், குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக் கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பி செலுத்த வேண்டிய உத்திரவாதம் போன்ற விவரங்களை மனுவுடன் இணைக்க வேண்டும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு கூறுவார்கள்.
எம்.எஸ்.எம்.இ., தொழில் அமைப்புகள் தங்கள் தயாரிப்புகள் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் பொருந்தாதபோது வணிகத்தை இழக்கின்றன. அதிலிருந்து மீள, சி.எல்.சி.எஸ்.எஸ்., மூலம் எம்.எஸ்.எம்.இ.,க்கள் குறைந்த வட்டியில் எளிதாக நிதி பெறலாம். தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் நவீனமயமாக்கப்பட்ட உற்பத்தியை உருவாக்க இது, உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் கேள்வி; என் பதில்சிறு தொழில் அமைப்புகளுக்கு அரசு கொடுக்கப்படும் மானியங்கள் தற்போது குறைந்து வருகின்றனவா?-கே.ஸ்ரீராம், ஆவராம்பாளையம், கோவை.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க பலமுயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. பலவகை சலுகைகள் மற்றும் மானியங்களும் இதில் அடங்கும். அவற்றில் முக்கியமானது கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம் (CLCSS). பெரும்பாலான திட்ட விவரங்களை சிறு தொழில் அமைப்புகளுக்கு சென்றடைவது இல்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|