பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:21

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில்,எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்தியபட்ஜெட் தாக்கலாகி உள்ளது. எல்லா துறைகளையும்உள்ளடக்கிய விரிவான அறிவிப்புகளை மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.
மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை, துறைவாரியாக அலசி ஆராய்ந்தால், ஒரே கட்டுரையில், எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. முதலில் நமது தேசத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் ‘எம்.எஸ்.எம்.இ.,’ என்று சொல்லப்படும் நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் துறையினருக்கான அறிவிப்புகளை பார்ப்போம்.நாட்டில், 6,000 விதமான பொருட்களை எம்.எஸ்.எம்.இ., துறை உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில், தொழில்துறை வேலை வாய்ப்புகளில் 45 சதவீதம் வேலை வாய்ப்புகளை எம்.எஸ்.எம்.இ., தொழில்கள்தான் வழங்கி வருகின்றன. இந்திய ஏற்றுமதியில் 50 சதவீதமும், நாட்டின் தொழில் துறையில், 95 சதவீத பங்களிப்பும் இவை கொண்டுள்ளன. இதனால், மத்திய அரசு இந்த துறைக்கு கூடுதல் அக்கறையும், கவனமும் கொண்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில், எம்.எஸ்.எம்.இ. துறைக்கு உதவும் வகையில், புதிய தேசிய லாஜிஸ்டிக் பாலிசி (National Logistics Policy) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இ–லாஜிஸ்டிக்ஸ் என்ற ஒரு மைய போர்ட்டல் உருவாகும். இது நிறுவனங்களின் தொடக்கம் முதல் இறுதி வரை நடக்கும், எல்லாவிதமான தளவாட (லாஜிஸ்டிக்ஸ்) பரிவர்த்தனை தீர்வுகளுக்கும் உதவும்.பொருட்களுக்கான கிடங்குத்திறனை அதிகரிக்கும். எம்.எஸ்.எம்.இ., தொழில்துறையினரை இணைக்க இந்த போர்டல் ஒற்றை சாளர சந்தையாக (Single Window Clearance) இருக்கும். இதன்மூலம், எம்.எஸ்.எம்.இ., தொழில்துறையினர் உற்பத்தி செய்யும் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது எளிதாகும். பொருட்களை கொண்டு செல்லும் செலவு குறையும்; வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்; வர்த்தகர்களின் சரக்கு போக்குவரத்து செலவைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம்.தேசிய சாலைபோக்குவரத்து அமைச்சகத்தின் (2015) புள்ளிவிவரப்படி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும், நமது நாட்டில், 228 நெடுஞ்சாலைகள் உள்ளன. ஒரு லட்சத்து 475 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன.
இன்சூரன்ஸ் மேம்படும்இன்னொரு அம்சமாக, மேம்பட்ட இன்சூரன்ஸ் தொகை வழங்குவதற்கும், சிறு ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு தொழில்களுக்கான பிரீமியத்தைக் குறைப்பதற்கும் நிர்விக் (நிரத் ரின் விகாஸ் யோஜனா) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் குறைந்த பிரீமியத்தில் அதிக இன்சூரன்ஸ் தொகை. எளிமைப்படுத்தப்பட்ட கிளைம் செட்டில்மென்ட் முறை போன்ற பலன் கிடைக்கும்.
மின் சந்தைஅடுத்தது, சிறு தொழில் அமைப்பினருக்கு தேவையான பொதுவான பயன்பாட்டு பொருட்கள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் கொள்முதல் செய்வதற்கான ஒரு மின் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெம் (GeM) என்று சுருக்கமாக அழைக்கப்படும், கவர்மென்ட் இ–மார்க்கெட் பிளேஸ் என்ற இந்த மின் சந்தை சீரான கொள்முதலுக்கு வழிவகுக்கும். பொது கொள்முதலில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் தொழில் வேகத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இதுவரை 3.24 லட்சம் பேர் இதில் பதிவு பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் மூலம்3 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
துணைக் கடன் வரும்தொழில்மேம்பாட்டுக்கு தேவையான கடன் வசதிகளை, உரிய நேரத்தில் வங்கிகள் வழங்காததுதான் சிறு தொழில்துறை வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துள்ளது என்று பலரும் பேசி வருகிறார்கள். அதை சரி செய்ய, துணைக்கடன் (Sub- Ordinated debt for MSME) கொண்டு வரப்பட்டுள்ளது. இது மார்ஜின்போல் இல்லாமல் கடன் பெறலாம். எஸ்.எம்.எம்.,இக்களுக்கு இன்ஸ்பெக்சன் இல்லாமல் இருந்தால் நலம்.
மற்ற அம்சங்கள்ஈவுத்தொகை வரி மாற்றம்ஈவுத்தொகை வினியோக வரியை இதுவரை கம்பெனி செலுத்தி வந்தது. இனி பெறுபவர்கள்தான் வரி செலுத்த வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கம்பெனிகள் செலுத்தும்போது 15 சதவீதமாக இருந்த இந்த வரி, 30 சதவீத வருமான வரிவிதிப்புக்குட்பட்ட நபர் செலுத்தும் போது அதற்கும் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும். வரிப்பிடித்தம் 10 சதவீதம் செய்ய வேண்டும்.
இங்கேயும் வருமா அமெரிக்க கலாசாரம்?தனிநபர் வருமான வரிவிதிப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டின் கதாநாயகனும் அதுதான். 10, 15, 20, 25, 30 என பல வரி விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிய வரி அமைப்பை ஏற்போருக்கு வரிச்சலுகைகள், கழிவுகள் கிடையாது. வரிச்சலுகைகள் பயன்படுத்திக்கொள்ளும், பழைய வரி அமைப்பு மற்றும் சலுகை கிடைக்காத புதிய வரி அமைப்பு எதை வேண்டுமானாலும் வரி செலுத்துபவர் தேர்வு செய்யலாம்.ஆனால், புதிய வரி முறையை தேர்வு செய்யும் நடுத்தர மக்கள், முதலீடு, சேமிப்பு இவற்றை கைவிட நேரிடும். இதனால் பண சுழற்சி, பண புழக்கம் அதிகரிக்கும். இது நுகர்வு கலாசாரத்தை ஊக்குவித்து, பொருளாதாரத்தை செழுமைபடுத்தும் என நம்பப்படுகிறது. இது நல்ல அணுகுமுறைதான். ஆனால், இது இன்னொரு ஆபத்தை உருவாக்கும் என்ற அச்சம் உள்ளது.அமெரிக்காவில் பல பத்தாண்டுகளுக்கு முன் இதுபோன்று மக்களை அதிகம் செலவு செய்ய வைக்கும் நுகர்வு கலாசாரத்துக்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். அங்கே தனிநபர் ஒவ்வொருவரிடமும், 4, 5 கிரடிட் கார்டுகள் இருக்கும். அங்கு மாத சம்பளம் இரண்டாக பிரிக்கப்பட்டு, 2 வாரங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. சேமிப்பு, முதலீடு மறக்கச்செய்யும் அதே அமெரிக்க கலாசாரம் நமக்கும் பரவி விடுமோ என்ற பயம் இங்கேயும் வந்துவிட்டது.
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களேஉங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|