பதிவு செய்த நாள்
09 பிப்2020
23:50
பழைய மற்றும் புதிய வருமான வரி விகித முறைகளில், ஏற்ற முறையை தேர்வு
செய்ய பின்பற்ற வேண்டிய வழி முறை வருமாறு:
முதலில், இரண்டு வரி விகித முறையின் அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், 15 லட்சத்திற்கு மேல் இருந்தாலும் சரி, 2 முறைகளிலும் ஒரே வரி விகிதம் தான். எனவே மாற வேண்டியதில்லை.
இரண்டாவதாக, புதிய முறையில் ரத்து செய்யப்பட்டுள்ள வரி விலக்குகளில், உங்களுக்கு எவை பொருந்தும் என பார்த்து, அதனடிப்படையில் ஏற்படக்கூடிய தாக்கத்தை கணக்கிட வேண்டும்.
நிகர வருமானம், விலக்குகளின் தாக்கம் ஆகியவற்றை கணக்கிட்ட பிறகு, இரண்டு
முறைகளிலும் செலுத்த வேண்டிய வரியை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.இதன் மூலம், எந்த முறையில் வரி குறைவாக செலுத்தலாம் என, கண்டறிய முடியும். இருந்தாலும், இந்த
அம்சத்தை மட்டும், அடிப்படையாக கொள்ளக்கூடாது. வரி குறைப்பு, குறுகிய காலத்தில் பலன் அளிப்பதாக இருந்தாலும், நீண்ட கால நோக்கிலான பலன்களை மனதில் கொள்ள வேண்டும். நிதி இலக்குகள் மற்றும் சேமிப்பு முக்கியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|